கொரோனாவின் பிடியில் அகப்பட்டு நேற்று பலியான முஹம்மட் ஜமால்டீன் அவர்களின் ஜனாசா எரிப்பு! நடந்தவை இதுதான்!!


கொடூர கொரோனாவின் பிடியில் அகப்பட்டு நேற்று பலியான முஹம்மட் ஜமால்டீன் அவர்களின் ஜனாசா எரிப்பு விடயமாக நீர் கொழும்பு வைத்தியசாலை பணிப்பாளர் RMSS.Ratnayakka அவர்களுடன் இம்போர்ட் மிரர் ஊடகப்பிரிவு தொடர்புகொண்டு உரையாடியபோது அவர் கூறியவை;

குறித்த முஸ்லீம் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக சீல் பண்ணக்கூடிய ஆடை வெளிநாட்டில் இருந்து வரவேண்டியது இன்னும் வந்து சேரவில்லை. குறிப்பிட்ட துணி (வைரஸ் வெளியேறாத துணி) கிடைத்திருந்தால் அடக்கம் செய்திருக்கலாம்.

மரணித்த உடலை வைத்திருக்க முடியாது. நேற்று 4 மணிக்கு மரணம் நிகழ்ந்துள்ளது. 6.20க்கு மரணித்தவரின் உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டு விட்டன. அத்துடன் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர்.

6.20 க்கு தகவல் வழங்கிய வைத்தியசாலைக்கு இரவு 11 மணிக்கே இறந்தவரின் மகன் அழைப்பை எடுத்திருக்கிறார். வைத்தியசாலைக்கு வாருங்கள் என்று அழைத்தும் யாரும் வரவில்லை. நீர்கொழும்பு ஜம்மியத்துல் உலமா சபை கூட அங்கு சென்று எந்த விடயமும் கதைக்கவில்லை.

அதனால் வைத்தியசாலையின் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இறப்பவர்களின் சடங்கினை சரியாக செய்திருக்கிறோம். என்று வைத்தியசாலை பணிப்பாளர் R.M.S.S.Ratnayakka தெரிவித்தார்.

மேலதிகமாக தகவல்கள் தேவைப்படுவோர் வைத்தியசாலை பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
தேவையில்லாமல் காதில் கேட்பதும் முகநூல்களில் பார்ப்பதும் உண்மையென அடுத்தவரை சங்கடத்துக்குள்ளாக்காது உண்மையை அறிவோம்.
0777787027
0312222261


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -