அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வற் வரி குறைப்பு 5,555 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கிடைப்பதாக தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ராஜாங்க அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.
தமது நிறுவனங்களின் பொருட்களில் மேற்படி வரி குறைக்கப்பட்டதால் விலை குறைந்துள்ளதாக 50க்கு மேற்பட்ட கம்பனிகள் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு ஏற்கனவே கடித மூலம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு தமது பொருட்களின் விலைக்குறைப்பு பற்றி ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் அவ்வாறான விலைக்குறைப்பை வழங்காவிட்டால் அது தொடர்பாக மேற்படி நுகர்வோர்
அதிகார சபை கிரமமான சுற்றிவளைப்புகளில் ஈடுபடுவதுடன் கடுமையான சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ளும் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.