சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்பாக பஸில் ராஜபக்ஸ அவர்களுக்கு, பள்ளிவாசல் நிருவாகிகள், மாநகர சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஸ பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றியதுடன், முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீயானி விஜயவிக்கிரம, விமலவீர திஸாநாயக்க அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் அத்துடன் பல அரசியல்வாதிகள் உட்பட சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகிகள், சுயேற்சை குழு சார்பான கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுடன் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில், கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரிப்பதனூடாக சாய்ந்தமருதுக்கான நகரசபையை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பது தொடர்பிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியின் கீழ் இந்த பிரதேசத்திற்கு வழங்க உத்தேசித்துள்ள அபிவிருத்திகள் குறித்தும் விரிவான உரைகள் நிகழ்த்தப்பட்டன.
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியானதும் சாய்ந்தமருது தரப்பினருடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் நிச்சயம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கினார்.
இக்கூட்டத்தில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு, கல்முனை, மருதமுனை, நட்பிட்டிமுனை, பாண்டிருப்பு உட்பட அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், வர்த்தகர்கள், கல்விமான்கள், மீனவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.