பெண்களுக்கு சாசணம் அமைத்த ஒரே வேட்பாளர் சஜித் பிரமதாசாவே -இராதாகிருஸ்ணன்




ஹட்டன் கேசுந்தரலிங்கம்-

ந்த நாட்டில் சுமார் 51 சதவீத்திற்கும் அதிகமாக பெண்களே உள்ளனர் ஆனால் அவர்கள் படும் அவலங்கள் சிரமங்கள் பற்றி எவரும் சிந்திப்பதில்லை இந்நலையில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வளர்ச்சி கருதி, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்ட ஒரே ஒரு வேட்பாளர் சஜித் பிரேதாச என்பதனால் மலையகத்தில் வாழுகின்ற அனைத்து பெண்களும் சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிராந்திங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக ஒன்றாக முன்னோக்கிச் செல்வோம்.எனும் தொனிப்பொருளில் மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணி இணைந்து ஏற்பாடு செய்த தேர்தல் மலையக மக்கள் முன்னணியின் பெண்கள் மாநாடு ஹட்டன் தொழிலாளர் பொழில் மண்டபத்தில் இன்று (13) மாலை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமாதாச அவர்ளால் பெண்களுக்கு ஏற்படும் துண்பங்களை நீக்குவதற்கு பெண்கள் சாசணம் என்று ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.இன்று பெண்களுக்கு பஸ்ஸில் நிம்மதியாக போக முடியாது. வீதியில் சுதந்திரமாக நடக்க முடியாது. பள்ளிக்கூடத்திற்கு போக முடியது பாலியல் தன்புறுத்தல், இவற்றை எல்லாம் நீக்கம் வேண்டும். அதற்காக மரண தண்டனை கொடுக்கப்பட்டாலும் கூட பரவாயில்லை. பெண்களுக்கு ஏற்படும் இழிவுகளை அப்புறப்படுத்துவதற்கும் பெண்களின் எதிர்காலத்தினை வளர்ப்பதற்கும். இந்த பெண்கள் சாசணம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச அவர்கள் சொல்கிறார். ஒரு குடும்பம் நல்ல இருக்க வேண்டும் என்றால் ஒரு 50 ஆயிரம் ரூபா தேவை என்று அது உண்மை நீங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். 

நன்றாக உடுத்த வேண்டும்,திருமணம் சடங்கு போன்றவை இன்றைய காலத்திற்கேற்ப நடத்த வேண்டும். அப்படி என்றால் கட்டாயம் எமக்கு வருமானம் இருக்க வேண்டும் அதற்காக அவர் கை தொழில்களை ஆரம்பிப்பதகவும், அதற்கான பயிற்சிகளையும் வழங்கி அதற்காக குழுவாகவோ அல்லது தனியாகவோ செயப்பட இடமளிக்க வேண்டும.; அதற்காக ஏற்பாடுகள் செய்வதற்கான திட்டங்கள் சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளன. இன்று மலையகத்தில் வாழும் பெண்களுக்கு போதிய அளவு வருமானம் இல்லாததன் காரணமாக பலர் நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து கடன்களை பெற்றுள்ளனர்.

 கடன் வழங்கியவர்கள் சம்பள தினத்தன்று வீட்டுக்கு வருவதனால் இன்று பலர் தற்கொலை முயற்சிக்கும் இறங்கியுள்ளனர். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் சஜித் பிரேமதாச குடும்கள் மகிழச்சியாக இருக்க வேண்டும். என்று பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார.அவர் வந்தால்; இலவசமாக பாலர் பாடசாலைகளை ஆரம்பிப்பதாகவும்,பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு சீருடை சப்பாத்து போன்ற வற்றையும் மதிய உணவினையும் வழங்குவதாக தெரிவிக்கிறார.; ஆகவே அவருக்கு வாக்களிப்பதன் மூலம் எதிர்காலத்தில் பல நன்மைகளை அடைய முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் லோரன்ஸ்,நிதி செயலாளர் புஸ்பா விஸவநாதன்,முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -