கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீடத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல், மாணவர்களுக்கான உணவகம், நூலகம், தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை செவ்வாய்க்கிழமை (12) திறந்து வைக்கப்பட்டது.
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யாவின் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட குறித்த கட்டடங்களை திறந்து வைக்கும் நிகழ்வு கலாபீட பிரதியதிபர் வீ.ரீ.எம்.முஸ்தபா தப்லீகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம் .எல்.எம்.முபாரக் மதனி, கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி பிரதித் தலைவர் எஸ்.எச்.அரபாத் சஹ்வி, தாருஸ்ஸலாம் கலாபீட அதிபர் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி, மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் லாபீர் மதனி, மற்றும் உலமாக்கள், ஆசிரியர்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.