ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேதாஸாவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் மகளீர் கருத்தரங்கு நாளை (12) சாய்ந்தமருதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும்,தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான கலாநிதி சீராஸ் மீராசாஹிபின் தலைமைல் நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கு கலாநிதி சீராஸ் மீராசாஹிபின் இல்ல திறந்த வெளியரங்கில் நாளை (12) செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இந்த கருத்தரங்கிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
விஷேட அதிதிகளாக முன்னாள் மகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஜவாத், எஸ்.எஸ்.பி. அப்துல் மஜீட், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளருமான எம்.ஏ.அன்ஸில், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான அப்துல் மனாப், முபீத் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.