
நேத்ரா தமிழ் செய்திப் பிரிவின் பணிப்பாளராக பணியாற்றுகின்ற யூ.எல்.யாக்கூப் அவர்கள் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசையின் பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இம்போட்மிரர் ஊடக வலயமைப்பின் நிருவாகம் மற்றும் வாசக உறவுகள் சார்பாக
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வுறுகிறோம்.
திரு. நோக ராஜாவின் ஓய்வை அடுத்து வெற்றிடமான இந்த பதவிக்கு இவர் கடந்த 25.10.2019 ம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சுமார் 35 வருட கால சேவை அனுபவம் உள்ள இவர், ஏற்கனவே தமிழ் செய்திப் பிரிவின் பணிப்பாளராக பணிபுரிகின்றார்.
அத்துடன் "வெளிச்சம்" நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமாவார்.
நேத்ரா அலைவரிசை தமிழ் மொழி அலைவரிசையாகும். மும்மொழிகளிலும் சரலாமாக உரையாடக் கூடிய யூ.எல்.யாக்கூப் அவர்கள் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை அவரின் திறமையும், தைரியமும், ஆளுமையுமாகும்.
இப்படியான ஆளுமைகளை நிர்வாகிகளாக் கொண்டுள்ள நேத்ரா அலைவரிசையின் நிகழ்ச்சிளின் தரமும் திரணும் இன்னும் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதே தமிழ் மொழி இரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.
நன்றி ரியாத்.