யார் இந்த மயோன்...
பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியான இவர் இப் பிரதேசத்தில் கணனி பற்றிய அறிமுகம் இல்லாத காலத்தில் கிழக்கில் கணனி பற்றிய அறிவை வழங்கியவர்களில் முன்னோடியானவர், இவரது Myown நிறுவனத்தில் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் கற்ற பலர் இன்றைய கணனித்துறைசார் உயர் தளங்களில் பணி புரிவது இவரது தீர்க்க அறிவின் விளைவே ஆகும்,..
இவரது அரசியல் பிரவேசத்தில் மக்களின் அழைப்பும் , மறைந்த தலைவர். கலாநிதி அஷ்ரஃப் அவர்களின் பங்கும் அதிகம்
ம். பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பல பணி புரிந்தவர்,
#மயோனின்_அரசியல்
தேசிய கட்சிகளில் மிகவும் முன்னணி உறுப்பினராக இருந்த இவர் அக்கால அரசியல் சந்தர்ப்ப வாதங்
களினால் பல முறை பாதிக்கப்பட்டவர், ஆனாலும் பொது மக்களின் தொடர்பிலும், மதிப்பிலும் இன்றும் தனக்கே உரித்தான செல்வாக்கில் இருப்பவர், எல்லாப் பிரதேசங்களையும் இணைத்து செயற்படும் ஆற்றலும், அதற்கான மொழி, ஆளுமையும், அனுபவமும் , மக்கள் தொடர்பும் உள்ளவர் என்பதுடன் கல்முனையின் அபிவிருத்தியில் மிக அக்கறையும் கனவும் கொண்ட ஒருவர்.
#கல்முனை_அரசியல்
இன்றைய கல்முனை அரசியல் இனவாத, பிரதேச வாத குறுகிய வட்டத்திற்குள் இறுகிப் போய் ஒரு இலக்கற்ற ,சாதிக்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது,
தேசிய கட்சிகளுடனும் ,பெரும்பான்மை மக்களுடனும் இணைந்து செல்ல முடியாத தலைவர்களைக் கொண்டதாகவும், அபிவிருத்தி பாதையை மறந்து, ஊர்களும், தனி நபர்களும் சுயநலமாகவும், போலி வாக்குறுதிகளையும் வழங்கி மக்களை ஏமாற்றும் பிரதேச அரசியல்வாதிகளையும் கொண்டதாக மாறி உள்ளது.
#மயோனின்_மறு_பிரவேசம்
மயோன் அவர்கள் பிரதி அமைச்சராக இருந்த பின்னர் சில காலம் அரசியலில் ஒதுங்கி இருந்த பின்னர் மீண்டும் இப்பிரதேசத்தின் நலன் கருதி இப்பிரதேசத்தில் உள்ள இடைவெளியை நிரப்ப முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியது,
ஏனெனில் இப்பிரதேசத்தில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தனது ஆளுமை மூலம் இலகுவான முறையில் தீர்க்க கூடிய அனுபவமும், ஆளுமையும் அவரிடம் உண்டு என்பதை அவர் கடந்த காலத்தில் நிரூபித்துள்ளார், அதற்கான ஒரு உதாரணம் அவரது KALMUNAI MAGA PLAN.ஆகும்
#எதிர்கால_இலக்குகள்
கடந்த 04:10:2019 அன்று இடம்பெற்ற அவரது ஊடக சந்திப்பில் பல முக்கிய விடயங்களை அவர் முன்வைத்திருப்பது தேசிய அளவில் பலரது கவனத்தையும் ,சிங்கள சமூக ஊடகங்களிலும் பிரதான இடத்தையும் பெற்றிருக்கின்றது. அத்த வகையில். அவர் முன்வைக்கும்
* தேசிய ஒருமைப்பாட்டுடன் முஸ்லிம்கள் இணங்கிச் செல்லல்,
* பிரதேச வாதமின்றிய கல்முனைப் பிரதேசத்தின் ஒற்றுமை,
* தேசிய அரசியலில் முஸ்லிம்கள் இணைந்து பயணிப்பது
* இன உறவின் அத்தியவசியம்
* தொழில் ரீதியான முன்னேற்றமும், இப்பிரதேசத்தில் புதிய தொழில் நிறுவனங்களின் அவசியமும்
* அபிவிருத்தியின் ஊடாக இப்பிரதேச மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பமுடன், குறுகிய சிந்தனைகளில் இருந்து மீட்டல்
போன்ற பிரதான இலக்குகள் முக்கியமானவை மட்டுமல்ல, நாம் அனைவரும் அவசரமாக சிந்திக்க வேண்டியவையுமாகும்.
#தேசிய_அரசியல்
இப்பிரதேச அபிவிருத்தியில் மட்டுமல்ல முஸ்லிம்களின் பௌதீக அபிவிருத்தியில் தேசிய கட்சி என்ற வகையில் கடந்த காலத்தில் மஹிந்த அரசு பல திட்டங்களை் நிறைவேற்றி உள்ளதுடன், எதிர்காலத்தில் அவர்களுடன் இணைந்து தனது அரசியல் பணியைத் தொடருவதற்காக,இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ச அவர்களை ஆதரிப்பதன் ஊடாக தேசிய அரசியலில் மீண்டும் தான் நுழைவதாக அறிவித்துள்ளார்.
#படிப்பினைகள்
மயோன் இப் பிரதேசத்தில் ஒரு படித்த, நியாயமான, கனவான் அரசியல் செய்தவர், மட்டுமல்ல பொது மக்களுடன் நெருக்கமாகவும், எளிமையாகவும் பழகக் கூடியவர், குறிகிய கால அவரது அரசியல் ஒதுங்கம் கல்முனைப்பிரதேசம் பல பிரச்சினைகளை எதிர் கொள்ளக் காரணமாக அமைந்து விட்டது எனலாம் ,
இப்பிரதேசம் தேசிய அரசியலில் இருந்தும் தூரமாக்கப்பட்டு , ஆளுமையற்ற உள்ளூர் அரசியல்வாதிகளால் இம்மக்கள் பிரதேச வாதத்திற்குள் தூண்டப்பட்டனர்,
இவ்வாறான துரதிஸ்ட நிகழ்வுகள் இடம் பெற்றமைக்கு இவர் நேரடி அரசியலில் இல்லாமையும் ஒரு காரணம் எனலாம்
குறிப்பாக கல்முனைப்பிரிப்பு தொடர்பான பிரச்சினைகள் தீவிரப் பகைகளாக மக்களிடையே மாற அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கின்றது, மயோன் போன்ற மக்களுடன் நெருங்கிப்பழகக் கூடிய, எல்லாப்பிரதேசங்களையும் அபிவிருத்தியில் அனுசரிக்கும் ஒருவர் அரசியலில் இருத்திருப்பின் இப் பிரச்சினைகள் இலகுவாகத் தீர்க்கப்பட்டிருக்கும் என உறுதியாகக். கூற முடியும்,
#பொதுமக்களின்_சிந்தனைக்கு,..
இலங்கை அரசியலில் முக்கியத்துவம் இடம்பெற்றிருந்த கல்முனையும் அதன் வரலாறும் இன்று குறுகிய சிந்தனைகளால் சீரழிக்கப்படுவதில் இருந்து காத்து எமது எல்லா ஊர்களும் சிறப்பாகவும், ஒற்றுமையாகவும் அபிவிருத்தி அடைய வேண்டுமாயின் மயோன் போன்ற தெளிவான அரசியல் பார்வையுள்ள, மக்களுடன் தொடர்புள்ள, தேசிய கட்சிகளில் செல்வாக்குள்ள, பிரதேசவாதமற்ற ஒரு ஆளுமையை முன் கொண்டு செல்வதே ஓரளவாவது எமது பல பிரச்சினைகளுக்கான எதிர்கால தீர்வாக அமையும் என்பது சமூக நோக்குள்ள பலரின் அபிப்பிராயமாகும் .
"மயோன் அவர்களின் பணி மீண்டும் தொடர வாழ்த்துக்கள்.."
முபிஸால் அபூபக்கர்
கல்முனை