கலாநிதி காரீஸ்டீன் ஸ்தாபித்த லைலாஉம்மா பௌன்டேசனின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்று வரும் சுயதொழில் பெறும் பெண்களுக்காக தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அத்துடன் வருமானம் குறைந்த மாணவா்களுக்கான 4 வருட புலமைப் பரிசில் திட்டம், பாடசாலை உபரகரணங்கள் வழங்கி வைப்பு போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன.
கலாநிதி காரிஸ்டீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டத்தரணி சானாஸ் மகுருப் கலந்து கொண்டாா். அத்துடன் மகரக சமுகநல பொலிஸ் அதிகாரி அல்விட்டிகல, இத் திட்டத்தின் பணிப்பாளா் திருமதி மக்கியா முசம்மில் வை.எம்.எம். ஏ பெண்கள் அணியின் தலைவி பவாசா தாகா, மற்றும் மகரகம அஸ்வா் பிளேசில் வாழும் குடும்ப உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.
இங்கு சமையல் கலை, தையல் கலை, கனணி, மணப் பெண் மற்றும் சிகை அலங்காரம், போன்ற பயிற்சி நெறிகள் இப்பிரதேச வாழ் மூவின யுவதிகளுக்கும் பயிலுவதற்கு அங்குராப்பண நிகழ்வும் இடம்பெற்றது.