இன்று (6) வெளியான புலமைப் பரிசில் பரீட்சையில் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் 169 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் குறித்த கோட்டத்தின் கீழுள்ள செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலயத்தில் 20, ஓட்டமாவடி தாருல் உலூம் 20, மாஞ்சோலை அல் ஹிரா 4, காவத்தமுனை அல் அமீன் 3, மாவடிச்சேனை அல் இக்பால் 3, ஓட்டமாவடி ஹிஜ்ரா 4, வாழைச்சேனை வை.அஹமட் 19, தியாவட்டவான் அரபா 2, ஓட்டமாவடி சாஹிரா 14, பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் 10, மீராவோடை உதுமான் 9, பிறைந்துறைச்சேனை சாதுலியா 3, ரிதிதென்னை இக்ராஹ் 02, பதுரியாநகர் அல் மினா 02, வாழைச்சேனை ஆயிஷா 07, ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் 06, மீராவோடை அமீர் அலி 07, வாழைச்சேனை ஹைராத் 03, ஓட்டமாவடி சரீப் அலி 31 ஆகிய பாடசாலைகளில் 169 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
குறித்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும், வழிப்படுத்திய பாடசாலை அதிபர்களுக்கும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பணிப்பாளர், பிரதி கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.