மடிகனணிகளை வழங்கும் 12 ஆவது அணியில் பண்டார கொஸ்வத்தவைச் சேர்ந்த எம்.என்.எவ். சப்fரா, பாணந்துறையைச் சேர்ந்த எம்.எவ். ஆயிஷா, மாடுல்சீமையைச் சேர்ந்த எஸ்.ஜெ. வேர்ஜினி, கண்டி உடதன்விலவைச் சேர்ந்த ஏ.எஸ். அஹமட், விபிலையைச் சேர்ந்த ஆர்.எம். சாஹிரா பானு ஆகியோரது பெயர்களை ஹாஷிம் உமர் பௌண்டேசனின் தெரிவுக் குழு முன்மொழிந்திருந்தது. குறித்த மாணவர்களுக்கே மடிகனணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.நௌபர், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்தி பிரிவின் பணிப்பாளர் சி .பி எம் .ஷியாம், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர், வசந்தம் தொலைகாட்சியின் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனிபா, தமிழன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஏ.எம். ஜௌபர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகிப் மொகமட் உள்ளிட்டவர்களுடன் மாணவர்களின் பெற்றோர் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.
இலங்கையில் மிகப்பிரபல்யமான ஹாஷிம் உமர் பௌண்டேசன், பல்வேறு பட்ட மக்கள்நல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலனுக்கு மிகவும் பிரதானமாக தேவைப்படும் மடிக்கணினிகளை "கல்விக்கு கைகொடுப்போம்" எனும் திட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
0 comments :
Post a Comment