இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு திரட்டி அவிசாவலை பகுதியில் இன்று (31.10.2019) இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை சில வாரங்களுக்கு முன்னர் தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, எமது மக்களின் சார்பில் முக்கியமான சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். காணி உரித்துடன் வீட்டுரிமை, தொழிற்பயிற்சி நிலையங்கள், கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டங்கள், பல்கலைக்கழகம் ஆகியவை இவற்றில் மிக முக்கியமானவையாகும்.
இந்நிலையில் எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் எம்மால் முன்மொழியப்பட்ட யோசனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல தோட்டத் தொழிலாளர்களை 'கைக் கூலி' என்ற நிலையிலிருந்து - நிலையான வருமானம் பெறுபவர்களாக மாற்றும் வகையிலான முகாத்துவ முறைமையை அறிமுகப்படுத்தவும், தனியார் மற்றும் அரச நிறுவனங்களுடன் இணைந்து கூட்டாக இதற்கான நடவடிக்கை முன்னெடுப்பதற்கும் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டுள்ளது. இது எமக்கு பெரும் மகிழ்ச்சியை தருக்கின்றது.
நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், இவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக விசேட ஜனாதிபதி செயலணியை சஜித் பிரேமதாச உருவாக்குவார். எனவே, சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் அவருக்கு வாக்குகளை வழங்கி, சமூக மாற்றத்தின், புரட்சியின் பங்காளர்களாக நாம் அனைவரும் மாற வேண்டும். கிடைத்துள்ள இந்த வரலாற்று சந்தர்ப்பத்தை நாம் எமக்கானதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இன்றும் (31) நாளையும் (01) தபால்மூல வாக்களிப்பு நடைபெறுகின்றது. எனவே, மலையகத்திலிருந்து தபால்மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற அனைவரும் சமூகத்தின் நலன்கருதி, சஜித்துக்கு வாக்களித்து அவரின் வெற்றிப்பயணத்தை ஆரம்பித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அதேவேளை, வடக்கு, கிழக்கு பகுதியிலுள்ள அரச ஊழியர்களும் சஜித்துக்கு ஆதரவாக்க வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாய கடப்பாடாக இருக்கின்றது. அதாவது சஜித்தின் வெற்றியிலேயே சிறுபான்மையின மக்களின் இருப்பு, பாதுகாப்பு என அனைத்து அம்சங்களும் தங்கியுள்ளன. மாறாக மாற்று தேர்வுகளை சிறுபான்மையின மக்கள் தேடுவார்களாயின் அது நமது தலையில் நாமே மண்ணை வாரிபோட்டுக்கொள்ளும் செயலுக்கு ஒப்பானதாகவே இருக்கும்.” என்றார்.