அஸ்ரப் ஏ சமத்-
துருக்கி நாட்டின் 96 வது தேசிய தினம் 29.10.2019 கொழும்பு காலிமுகத் திடல் கோட்டலில் துருக்கி நாட்டின் இலங்கைத் துாதுவா் துன்கா ஒஸ்கந்தா் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமைச்சா் றிசாத் பதியுத்தீன் கலந்து கொண்டாா். அத்துடன் இவ்வருடம் டிசம்பா் 31ஆம் திகதியுடன் தமது பதவிக் காலத்தை முடித்த நாடு திரும்பும் துருக்கித் துாதுவரை அதிதிகள் வாழ்த்தி பாராட்டுக்களை தெரிவித்தனா்.
இந் நிகழ்வின்போது கொழும்பு -ஸ்டாம்பு நாட்டுக்கு இலங்கையா்கள் சுற்றுப்பிரயாணம் மேற்கொள்வதற்காக அங்கு வருகை தந்தவா்களின் அழைப்பிதழ்களிருந்து சீட்டிலுப்பும் ஒன்று இடம்பெ்றறது. இதில் அதிா்ஸ்டசாலிகள் 12 இலங்கையா்களுக்கு துருக்கி விமான நிறுவனத்தினால் இலவச விமனாச் சீட்டுக்கள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய அமைச்சா் றிசாத் பதியுத்தீன்
துருக்கி நாடு இலங்கைக்கு பல உதவித் திட்டங்களை செய்து வருகின்றது. இலங்கையில் ஏற்றுமதி -இறக்குமதி. வா்த்தகம், சுற்றுலத்துறை , நீர்விநியோகம், நிர்மாணத்துறை மிண்சார திட்டங்களில் இலங்கையில் முதலிட்டுள்ளது. இலங்கைத் தேயிலையையும் கூடுதலாக துருக்கி கொள்முதல் செய்து வருகின்றது. அத்துடன் இலங்கை துருக்கி பாராளுமன்ற நட்புறச் சங்கம் இரு நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு நட்புரவை வளா்த்துள்ளது.. அத்துடன் தற்போதைய துருக்கித் துாதுவா் கடந்த 3 வருட காலங்களில் இலங்கையில் ்அவ்வப்போது இடம்பெறும் இயற்கை அனா்ந்ததங்களுக்கும் மற்றும் கல்வித்துறைகளுக்கும் உதவியளித்துள்ளது. ஊடகவியலாளா்களுக்கு துருக்கியில் ஊடகப் பயிற்சித் திட்டம் போன்ற திட்டங்களை இலங்கை ஊடகயளாா்களுக்கு வழங்கி வருகின்றமையிட்டு துருக்கி நாட்டின் அரசுக்கும், ஜனாதிபதிக்கும் இலங்கை நாட்டின் ஜனானதிபதி சாா்பாக நன்றியைத் தெ்ரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் அங்கு உரையாற்றினாா்.