முஹம்மது ஸில்மி
வைத்திய மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகம்
01) . வாய்ப் புற்றுநோய் ORAL CANCER
ஒவ்வொரு நபரும் சுய வாய்ப் பரிசோதனையைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும் . வாயில் பாரதூரமான இழையவியல் நிலமைகளைக் கொண்ட நிலைகள் , ( OPMD ) இ ஒருவரில் வாய்ப் புற்று நோய் தோன்றுவதற்கு முந்தைய நிலைகளாகக் கொள்ளப்படும் .
( OPMD ) இன் அறிகுறிகள்
@ தொடர்ந்து காணப்படும் வெள்ளைத் திட்டுகள் அல்லது புள்ளிகள் .
@வாயின் உள்மேலணி இழையமானது . வெளிறியும் இ திரட்சியடைந்தும் , எரிச்சலூட்டுவனவாகவும் , வாயைத் திறப்பதில் சிரமமும் காணப்படல் ,
@ தொடர்ந்து காணப்படும் சிவப்பு நிறத் கலந்து காணப்படும் சிவப்பும் திட்டுகள் அல்லது புள்ளிகள் ,
@ வெள்ளையும் கலந்த புள்ளிகள் அல்லது திட்டுகள் .
@ நீண்ட காலத்துக்குக் குணமடையாத வாய்ப் புண்கள் . மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளுடன் யாராவது பாதிக்கப்பட்டுக் காணப்பட்டால் அவரை உடனடியாகப் பல் மருத்துவர்களிடமும் ஆலோசனை பெற அனுப்பிவைக்க வேண்டும் .
வாய்ப் புற்றுநோய்க்குரிய அதியுயர் ஆபத்துக் காரணிகள் கொண்டவர்கள்
@ தினமும் வெற்றிலை மெல்லும் மக்கள் .
@ வெற்றிலை மெல்லுவதோடு கூடுதலாகப் புகை பிடிக்கின்ற மக்கள் .
@ வணிகத் துறைப் புகையிலை மற்றும் பாக்குப் பாவனைகளுக்கு அடிமையான மக்கள் .
அதிக ஆபத்துக் காரணிகளைக் கொண்ட மேற்குறிப்பிடப்பட்ட மக்கள் , உடனடியாக பல் மருத்துவர்களிடம் பரிந்துரைக்கப்பட வேண்டும் .
02 . உணவுக்குழாய் - களப் புற்றுநோய் ESOPHAGEAL CARCINOMA
மருத்துவ அறிகுறிகள்
• மூன்று வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து உணவு விழுங்குவதில் கஷ்டம்
• மூன்று வாரங்களுக்கு மேலாக உணவு விழுங்கும் போது வலி ஏற்படல்
• . தன்னிச்சையாக உடல் எடை இழப்பு ஏற்படல் .
03 . இரைப்பைப் புற்றுநோய் GASTRIC CARCINOMA
மருத்துவ அறிகுறிகள்
• வயிற்றின் மேற்பகுதியில் வலியும் அசௌகரியமும் ஏற்படல் . பசியின்மை .
• சில வேளைகளில் கறுப்பு நிறமாக மலம் கழித்த ல்
• ஓங்காளம் மற்றும் வாந்தி ஏற்படல் .
• தன்னிச்சையாக உடல் எடை இழப்பு ஏற்படல் .
• இரத்தச் சோகை ஏற்படல்
04 . பெருங்குடல் மற்றும் மலக்குடற் புற்றுநோய் COLO RECTAL CARCINOMA
மருத்துவ அறிகுறிகள்
• மலத்துடன் இரத்தம் கலந்து வெளியேறல் .
• மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்படல் .
• வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலுடன் கலந்த மலங்கழிக்கும் வழக்கம் .
• மலவாசலுக்கூடான இரத்தப்போக்கு காணப்படல் .
• -மெல்லிய நூல் இழைபோல் மலம் வெளியேறல் .
• முழுமையாக மலம் வெளியேறாத உணர்வு காணப்படல் .
• வயிற்று வலி காணப்படல் .
• .காரணமற்ற உடல் எடை இழத்தல் .