கடந்தசில நாட்களாக பெய்துவரும் அடைமழைகாரணமாக ஏற்பட்டவெள்ளநீரை வழமைபோல கடலுக்குள் வெட்டிவிடும்போது இடையூறு விளைவித்த இருவருக்கெதிராக காரைதீவு
பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் சம்மாந்துறைப்பொலிசில்
முறைப்பாடொன்றைத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று(29)செவ்வாயக்கிழமை கொட்டும் மழையில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்டம்பூராக நேற்று அடைமழை பொழிந்துகொண்டிருந்தது.
வெள்ளநீரால் காரைதீவுப்பிரதேசம் தாழும் நிலைக்கு வந்தததையடுத்து
பொதுமக்களின் வேண்டுகொளையேற்று பிரதேச செயலகத்தினர் மற்றும்
கரையோரப்பாதுகாப்பு அதிகாரி சகிதம் பிரதேசசபையினர் கவுண்டிகொண்டு வெள்ளநீரை வெட்டிவிட்டனர்.
அச்சமயம் அருகிலுள்ள நிந்தவூரிலிருந்துவந்த இருவர் கடமைக்கு இடையூறு
விளைவித்தனர். அங்குநின்ற அதிகாரிகள் மற்றும் தவிசாளர் எவ்வளவோ
எடுத்துச்சொல்லியும் கேட்காமல் இடையூறுவிளைவித்தனர்.
காரைதீவுப்பிரதேசத்தினுள் உள்ள முகத்துவாரப்பகுதியை வெட்டுவதில்
ஏனையோருக்கு என்ன பிரச்சினை என்றுகேட்டதற்கு எமக்கு அதனால் பாதிப்பு என்றுசொல்லி பிரச்சினைக்கு வந்தனராம்.
அதனால் தவிசாளர் ஜெயசிறில் சம்மாந்துறைப்பொலிசுக்குச்சென்று தமது
கடமைக்கு இடையூறு விளைவித்தார்கள் என்று வாய்மொழிமூல
முறைப்பாடொன்றைத்தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட இருவரையும் தேடி பொலிசார் வலை விரித்துள்ளனர்.