வாழைச்சேனை அந்நூரில் அருங்காட்சியகம் திறப்பு நிகழ்வும், சஞ்சிகை வெளியீடும்.

எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் அருங்காட்சியகம் திறப்பு நிகழ்வும், சஞ்சிகை வெளியீடும் இன்று (29) பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பாடசாலையில் வெளியீட்டு வைக்கப்பட்ட பழமைவாய்ந்த நூல்கள், சான்றிதழ்கள், மற்றும் பத்திரிகைச் செய்திகளின் பிரதிகள், பாடசாலையில் கடமை புரிந்த அதிபர்களின் புகைப்படங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அத்தோடு தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வில் அந்நூரின் கையெழுத்து சஞ்சிகை, பொருளியல் புத்தகம் ஆகியவை வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் டொக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் எம்.என். ரவிகுமார் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -