அவர் மேலும் தெரிவித்ததாவது,
எமக்கு ஜே வி பியுடன் தனிப்பட்ட எந்த கோபதாபங்களும் இல்லை. ஆனால் கட்ந்த 30 வருட காலத்துள் ஜே வி பி பெரும்பாலும் பாராளுமன்றத்தில் எதிர் தரப்பில் இருந்தும் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த போது அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கி செயற்பட்டு ஏதாவத்ய் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததா என்றால் இல்லை என்பதை ஜேவிபியும் முஸ்லிம் சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும்.
புலிகளுடனான யுத்தத்துக்கு முன்பும் ஜே வி பியினர் முஸ்லிம்களுக்கு எதிராகவே செயற்பட்டனர்.
அப்போதெல்லாம் நாட்டில் ஐ தேகவும் சுதந்திரக்கட்சியுமே ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்துள்ளன. ஜே வி பியும் எதிர்க்கட்சியாகவும் சந்திரிக்காவின் அரசில் அமைச்சர்களாகவும் இருந்துள்ளது. ஆனாலும் ஏனைய இரு பெரும் கட்சிகளையும் விட முஸ்லிம் இன விரோத போக்குள்ளதாகவே ஜே விபி இருந்து வந்தது. அம்பாரையில் அரசால் சுவீகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளுக்கு மாற்றுக்காணி வழங்க விடாமல் தடுத்தது ஜேவிபி என்பதை நாம் மறக்க முடியாது.
யுத்தத்துக்கு பின்னர் 2012ம் ஆண்டு தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினை ஏற்பட்டு அப்பள்ளிவாயல் வேறொரு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும் என இனவாதிகள் கூக்குரலிட்ட போது, அவ்வாறு பள்ளியை இடமாற்றுவது முஸ்லிம்களின் சமய உரிமைக்கு எதிரானது என ஜே வி பி பேசியதா?
இந்நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததா?
அதே போல் 2013ல் ஹலால் பிரச்சினை எழுப்பப்பட்டு நாடே கொந்தளித்த போது ஹலால் என்பது முஸ்லிம்களின் உரிமை என நேரடியாக கூறியதா?
அளுத்கம கலவரம் நடந்த போது தமது சிங்கள தொண்டர்களை அனுப்பி தமது இன காடையர்களை கட்டுப்படுத்தியதா? ஆகக்குறைந்தது தாக்குதலுக்கு காரணமான தேரர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்களை கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தியதா?
முஸ்லிம்கள் தமது உணவகங்களில் கர்ப்பத்தடை மருந்து கலக்குகிறார்கள் என அம்பாரையில் பிரச்சினை ஏற்படுத்தப்பட்ட போது தமது கட்சி ஆதரவாளர்களை தலையிட செய்து உண்மையை தமது மக்களுக்கு விளக்கினார்களா ? இல்லை. அம்பாரையில் ஒரு ஜே வி பியும் இல்லை என்பது போல் மவுனமாக இருந்தனர்.
அதே போல் கண்டி, திகன, காலி, மினுவாங்கொடை வரை நடை பெற்ற தாக்குதல்களின் போது ஜே வி பி தலைவர்கள் எவரும் களத்துக்கு சென்று தமது இன காடையர்களை தடுக்க முடியவில்லை. இத்தனைக்கும் ஆறு லட்சம் சிங்கள வாக்குகளை கொண்டவர்கள் இவர்கள்.
இவ்வாறு நாம் சொல்லும் போது பேரின கட்சிகள் சரியாக நடந்ததா என்ற கேள்வி எழலாம். பேரின கட்சிகளும் தமது பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதிலேயே அக்கறை கொண்டிருப்பது போல் ஜே வி பியும் உள்ளது என்றே கூறுகிறோம். இந்த வகையில் ஜே விபியும் ஒரு பேரினவாத கட்சிதான்.
இந்த நிலையில் ஜேவிபியை இப்போதைக்கு நாம் சிறுபான்மைக்கு சார்பான கட்சியாக பார்க்க முடியாது. இந்த வகையில் ஏனைய இரு பெரும் கட்சிகளான ஐ தே கவும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலும் இருந்த நாம் எந்தக்கட்சி எமது சமூகத்துக்கு அதிக நன்மை செய்தது என்பதை பார்த்து அக்கட்சிக்கு நாம் வாக்களிக்க முயல வேண்டும்.