திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவை சேர்ந்த நிஸார்தீன் முஹம்மட் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில்ஹ" தேசகீர்த்தி" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ஹெல்பிங் அல்லைன்ஸ்(Helping Alliance) அமைப்பினால் கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (13) அமைப்பின் தலைவரும் முன்னால் மேல்மாகாண சபை உறுப்பினருமான எம்.பாயிஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து கொண்டு பட்டத்தினை வழங்கி வைத்தார்.
கிண்ணியா நகர சபை உறுப்பினரும்,துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சரின் பொது மக்கள் தொடர்பாடல் அதிகாரியுமான இவர் கிண்ணியா பெறியாற்றுமுனையை வசிப்பிடமாகக் கொண்டவரும் கிண்ணியா மத்திய கல்லூரியின் பழைய மாணவருமாவார்.