சிலோன் மீடியா போரத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இலங்கை மூவின ஊடகவியலாளர்களின் நலன்சார் விடயங்கள் குறித்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிலோன் மீடியா போரத்தின் செயற்குழுக் கூட்டம் (14) சாய்ந்தமருது ஸீ பிறீஸ் ஹோட்டலில் போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போதுஇலங்கையின் மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மூவின ஊடகவியலாளர்களின் நலன்சார் நிரந்தர செயற்றிட்டங்களை பெற்றுக்கொடுக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இத்திட்டத்தில் முழுமையாக முன் ஒரு போதும் இல்லாதவாறு ஊடகவியலாளர்கள் பல்வேறு நன்மைகளைப் பெறவுள்ளனர்.
ஊடகவியாலாளர்களின் நலன்சார் விடயங்கள் குறித்து துறைசார் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுடனான உயர்மட்ட சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.