முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம் எதயகுமார் புகழாரம்
ஹட்டன் கே .சுந்தரலிங்கம்- மலையகத்தின் அபிவிருத்தி என்ற ரீதியில் அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்தியவர் தலைவர் திகாம்பரம் அவர்கள் நுவரெலியா மாவட்டம் மட்டும் மல்ல மலையகத்தின் திமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அத்தனை மாவட்டங்களிலும் அபிவிருத்தியை கொண்டு சென்றவர் திகாம்பரம் அவர்கள,; நேற்று கூட கண்டி மாவட்டத்திலும் காலி மாவட்டத்திலும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தார.; 200 வருட காலப்பகுதியில் எவரும் செய்யாத அபிவிருத்தி புரட்சியினை தலைவர் திகாம்பரம் அவர்களே செய்துள்ளார். எனவே தேவையறிந்து சேவை செய்யும் ஒரே தலைவர் திகாம்பரம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும் முன்னாள் மத்திய மகாண சபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.
ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் லெதன்டி புரடெக் தோட்த்தில் ( மந்திதோட்டம்); ஒரு கோடியே 50 லட்சம் ரூபா செலவில் இந்திய அரசாங்கத்தின நிதி உதவியில் நிர்மானிக்கப்படவுள்ள 15 வீகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எம.; உதயகுமார் தலைமையில் இன்று ( 28 ) திகதி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மலையகத்தில் எமது மக்கள் எங்குகெங்கு வாழ்கின்றோர்களோ, அவர்களுக்கெல்லாம் தற்போது வீடுகளை கட்டிக்கொடுத்து வருகிறார்கள். அவர் வீடுகளை கட்டிக்கொடுக்கும் போது மக்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொள்வதில்லை. சிறிய தொகையிருந்தாலும் கூட வேறுபாடுகள் இன்றி வீடுகளை கட்டிக்கொடுத்து வருகிறார்.இன்றும் பதுளை,அக்கரபத்தனை என்று பல இடங்களில் முன்னெடுத்து வருகிறார்கள். இவரின் தலைமையில் மாததத்தில் சுமார் 60 தொடக்கம் 100 வரையிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த காலங்களில் நீங்கள் எடுத்துப்பார்த்தீர்களேயானால் ஒரு வருடத்தில் கூட இந்த அளவுக்கு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.இங்கு பெரியவர்கள் இருக்கிறார்கள். மூத்த தொழிற்சங்க வாதிகள் இருக்கினறார்கள். அபிவிருத்தி என்ற பேரில் வாக்குறுதிகள் மாத்திரமே வழங்கப்பட்டு;ள்ளன.
ஆனால் சுமார் 60 குடும்பங்களை கொண்ட இந்த புரடெப் தோட்டத்திற்கு மூன்று கோடி அறுபது லட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது.இவற்றை கடந்த காலங்களில் நினைத்து கூட பார்க்க முடியாது.
கடந்த காலங்களில் தோட்டப்பாதைகள் அபிவிருத்தி செய்ததாக சரித்திரமேயில்லை. ஆனால் இன்று தோட்டப்பாதைகள் காபட் இடப்படுகின்றன.மக்களின் நலம் அறிந்து மக்களின் தேவை உணர்ந்து சேவை செய்யக்கூடிய அமைச்சி தான் அமைச்சர் திகாபரம் கீழ் இருக்கின்றது.
திகாம்பரம் பதவி ஏற்று நான்கு வருட காலப்பகுதியில் சுமார் 8883 வீடுகள் கட்டப்பட்;டுள்ளன.அது மட்டுமல்லாது 3000 வீடுகள் கட்டப்பட்டுகொண்டிருக்கி;ன்றன.அத்தோடு இந்திய நாட்டின் நிதி உதவியில் அடுத்த ஒக்டோபர் மாதம் 10 ஆயிரம் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட இருக்கின்றன.இவை எவையுமே மலையக மக்களுக்கு கிடைக்க முடியாத ஒன்றாகவே இருந்து வந்தன.இந்த நல்லாட்சி அரசாங்த்தில் தலைவர் திகாம்பரம் பதவி ஏற்றதன் பின் தான் அனைத்தும் கிடைத்து வருகின்றன.
கடந்த காலங்களில் நீங்கள் வாக்களித்து அனுப்பியவர்கள் பாhராளுமன்றத்தில் இருந்தார்கள.; அமைச்சு பொறுப்புக்களிலும் இருந்தார்கள.ஆனால் என்ன அபிவிருத்தி திட்டங்கள்; நடந்துள்ளது.
ஒரு அமைப்புக்கு வாக்களித்து வாக்களித்து ஏமாந்தமோ தவிர வேறு எதுவும் நடைபெவில்லை.ஆனால் தலைவர் திகாம்பரம் அவர்கள் மக்களின் அடிபபடை தேவைகளை பூர்த்தி செய்வதில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார.; நாங்கள் 2015 ஆண்டு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் 2025 வரும் போது கட்டாயம் நிறைவேற்றியிருப்போம.; எனவே வருகின்ற வருடம் தேர்தல் வருடம் இதில் அனைவரும் வருவார்கள.; பல பொய்களை கட்டவிழ்த்து விடுவார்கள். அவற்றிக்கு அடிபணியாது உண்மையாக சேவை செய்யக்கூடிய தலைவர்களை நீங்கள் தெரிவு செய்து கொள்ள வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.
ஹட்டன் செனன் வட்டாரா அமைப்பார்ள விஜேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கண்டி இந்த உதவி தூரகத்தின் உதவி தூதுவர் திபேந்திர சிங்,மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன்,ராம்,சரஸ்வதி சிவகுரு .மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் புத்திரசிகாமணி உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கயஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.