மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேனன மாநாடு



அஸ்லம் எஸ்.மெளலானா-
லங்கை மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேனன மாநாடு இன்று சனிக்கிழமை (27) அம்பாந்தோட்டை செங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் சக்கி அதாவுல்லாஹ், யாழ் மாநகர முதல்வர் ரி.ஆர்னோல்ட் உட்பட 20 மாநகர முதல்வர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மாநகர முதல்வர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மாநகர சபைகளின் அபிவிருத்தி, சபைகளின் செயற்பாடுகளையும் அதிகாரங்களையும் வலுப்படுத்தல், மக்களுக்கான சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல், மாநகர முதல்வர்கள் அனைவரும் பரஸ்பரம் ஒத்துழைத்தல், புரிந்துணர்வுடன் கூட்டாக செயற்படல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

அத்துடன் இவற்றையொட்டியதாக முக்கிய சில தீர்மானங்களும் இம்மாநாட்டில் நிறைவேற்றுப்பட்டுள்ளன.
இறுதியாக ஊடக சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -