எமது நாடு மேற்குலகின் குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டிருப்பது வேதனைக்குரியதென முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா



ஏஎம் றிகாஸ்-
டந்தகால அரசாங்கம் மேற்குலக நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்த இணக்கப்பாட்டின் காரணமாக தற்போது எமது நாடு மேற்குலகின் குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டிருப்பது வேதனைக்குரியதென முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

கடந்தகால அரசாங்கத்தின் தூரநோக்கற்ற திட்டமிடப்படாத செயற்பாடுகளினால் பாரிய கடன்சுமையை சுமந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு- ஏறாவூர் ஆயுர்வேத தள வைத்தியசாலைக்கு தளபாட கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வைத்திய அத்தியட்சகர் எம்எஸ்எம். லாபிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்தியர்களான ஏசிஎம் சஹீட் மற்றும் எச்எம்ஏ. ஜப்பார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா இவ்வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெறுவோரை பார்வையிட்டதுடன் வைத்தியசாலையின் குறைபாடுகள் பற்றியும் கேட்டறிந்தார்.
இவ்வைத்தியசாலை தள வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு பல வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் அடிப்படைவசதிகளின்றி செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
கட்டடம், நோயாளர் கட்டில், மின்பிறப்பாக்கி, நோயாளர்காவி வண்டி போன்றவற்றுடன் மூலிகைத் தோட்டச்செய்கைகான காணியையும் பெற்றுத்தருமாறு குறிப்பிடப்பட்ட மகஜர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கைளிக்கப்பட்டது.
மூலிகைத் தோட்டத்திற்கான காணியை உடனடியாகப் பெற்றுத்தருவதாகவும் ஏனைய தேவைகளை சுகாதார அமைச்சின் ஊடாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா உறுதியளித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் -- ஐக்கிய நாடுகள் சபை பூகோள வீதியில் நாடுகளை வகைப்படுத்தியதன் பிரகாரம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு செல்வந்த நாடுகள் உதவியளிக்கும் திட்டத்தின்கீழ் எமது இலங்கை நாட்டில் கல்வி மற்றும் சுகாதார முன்னேற்றத்திற்கு பல்வேறு நாடுகள் உதவுகின்றன. இதையடுத்து நாம் எழுந்து நிற்கின்றோம்.

இந்த நிலையில் கடந்தகால அரசாங்கம் தூரநோக்கற்ற சிந்தனையுடன் மேற்கத்தேய நாடுகளுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டிற்கமைவாக அங்குள்ள திண்மக்கழிவுகள் எமது நாட்டிற்கு கொள்கலன் கணக்கில் அனுப்பப்படுகின்றன. அவற்றில் ஆஸ்பத்திரி கழிவுகள் மாத்திரமின்றி மனித எச்சங்களும் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. கடந்தகால அரசாங்கம் சுமத்திவிட்டுச்சென்ற ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் கடன்சுமை இறக்குவதற்கும் குப்பைகளை தடுப்பதற்கும் நல்லாட்சி அரசாங்கம் போராடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -