உலகின் சிறிய சுவிஸ்சர்லாந்து என அழைக்கப்படுவது இலங்கையின் நுவரெலியா நகரமாகும்.இந்த நகரத்தின் நுழைவாயிலாக காணப்படுவது ஹட்டன் நகரமாகும்.
ஆனால் கடந்த சில வாரங்களாக ஹட்டன் நகர சபையினரால் சேகரிக்கப்படும் குப்பைகள் ஹட்டன் நகரில் அமைந்துள்ள சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தின் ஓரத்தில் கொட்டப்படுவதனால் பல்வேறு சுகாதார சீர் கேடுகள் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் நகில் சுமார் நாலொன்றுக்கு மூன்று தொடக்கம் நாலு தொன் குப்பைகள் சேர்கின்றன. இவற்றில் இரண்டரை தொன் மாத்திரமே ரிகாடன் பகுதிக்கு சேதனைப்பசளை தயாரிப்பதற்க்காக அனுப்பி வைக்கப்படுவதாகவும் ஏனைய ஒன்றைரை தொன் குப்பைகள் இவ்வாறு சன நடமாடும் பகுதியில் கொட்டப்பட்டு நகர சபையின் ஊழியர்களால் குறிப்பிட்ட ஒரு பகுதி தீயிடுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த குப்பை கொட்டும் பகுதியில் மரக்கறி கடைகள் உணவகங்கள்,இறைச்சிக்கடைகள் ஆகின அமைந்திருப்பதனால் நோய் காவிகள் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காப்படுகின்றன.
குறித்த குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுதவனால் பஸ் தரிப்பிடத்திற்கு வரும் பொது மக்கள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வரும் நுகவோர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்த துர்நாற்றம் காரணமாக பயணிகள் தமது மூக்கினை மூடிக்கொண்டு மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் பஸ்ஸி;னுள் அமர்ந்திருப்பதாக பஸ் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா மற்றும் சிவனொளி பாதமலை,எல்ல போன்ற சுற்றலா பிரதேசங்களுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பிராயாணிகளும் இப்பிரதேசத்திலிருந்தே பஸ்களுக்கு ஏறுவதனால் எமது நாடு பற்றிய சிந்தனை ஆரம்பித்திலேயே தவறாக எண்ணப்படுவதை எவரும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறியுள்ளன.
ஹட்டன் நகரித்தின் குப்பை பிரச்சினை இன்று நேற்று தோன்றியதல்ல பல வருடகாலமாக காணப்பட்ட போதிலும் நுவரெலியா மாவட்டத்தினை பிரதிநிதித்துவம் படுத்தும் அமைச்சர்கள் மூன்று பேரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரும் இருந்த போதிலும் இது வரை இந்த குப்பை பிரச்சினைக்கு கூட தீர்வு காண முடியவில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மலையகத்தின் பல தோட்டங்கள் காடாக மாறி வரும் நிலையில் பல இடங்கள் பயிர் செய்யப்படாக காணிகள் காணப்படும் நிலையில் மலையக குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமுடியாதிருப்பது மிகவும் கவலையளிப்பதாக பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நகரசபை அதிகாரிகளிடம் வினவிய போது பல இடங்கள் குப்பை கொட்டுவதற்காக தெரிவு செய்த போதிலும் அதற்கு பொது மக்கள் எதிர்;ப்பு தெரிவிப்பதன் காரணமாக சரியான இடத்தினை தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும,மிக அண்மையில்; வட்டவளை பகுதியில் தனியார் காணி ஒன்றை குத்தகைக்கு பெற்று குப்பை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும் அதற்கு பௌத்த மத குரு ஒருவரின் எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சியும் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.
எது எவ்வாறான போதிலும் இது ஒரு உள்ளுராட்சி சபையின் பிரச்சினை மாத்திரமன்று. இது ஒரு சமூக பிரச்சினையாகும். குறித்த குப்பை காரணமாக நோய்வாய்பட்டால் அதனை குணப்படுத்தப்பட வேண்டியதற்கான செலவீனங்களையும் அரசாங்கமே செய்ய வேண்டியிருக்கும். அத்தோடு பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களும் ஏற்படும் எனவே அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டு இது எமது நகரம் இது எமது சமூகம் என எண்ணி, கட்சி பேதங்களை மறந்து அனைவரும் இணைந்து இதற்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என பொது மக்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
