வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய ஆடிஅமாவாசை மஹோற்சவத்தின் ஓரங்கமாக கல்விச்சாதனையாளர்கள் பாராட்டுவிழா இன்று(30) செவ்வாய்கிழமை இரவு 10.30மணிக்கு ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
திருக்கோவில்வலயத்தைச்சேர்ந்த தரம்5 புலமையாளர்கள் க.பொத. சா.த 9ஏ புலமையாளர்கள் க.பொ.த. உயர்தர சாதனையாளர்கள் என மூவகையைச்சேர்ந்த உயர்பெறுபேற்றைப்பெற்ற 18மாணவர்கள் பாராட்டிக்கௌரவிக்கப்படவுள்ளனர்.
தரம்5புலமையாளர்கள்.(04பேர்)
கௌரீஸ்வரன் நர்த்தனன் சிவச்சந்திரன் பவிங்கன் கோபாலகிருஸ்ணன் கர்மிசன் ஆனந்தராசா சனுக்சன்.
க.பொ.த . சா.த 9ஏ சாதனையாளர்கள்;(04பேர்)
சிவநேசன் யதுர்சனா கிருபைராஜா நிசாநிதன் ரவீந்திரன் ஹேசாந்த் நாகேந்திரன் சஹிர்தன்.
க.பொ.த .உயர்தர சாதனையாளர்கள்:((10பேர்)
கோபாலரெத்தினம் தீபன் - மருத்துவம் மகராசா தனுசன்- மருத்துவம் சந்திரகுமார் சதுர்சன் - மருத்துவம் செம்பொற்சோதி செய்ன்தன்- பொறியியல் சிறிகரன் ஹரிஸ்- பொறி.தொழினுட்பம் அருந்தவராஜா சதிராஜ்-விஞ்.தொழினுட்பவியல் நடராசா தனோஜினி-உயிரியல் விஞ்ஞானம் சர்வானந்தம் நிலக்சன் - பௌதீகவிஞ்ஞானம் பேரின்பம் டிலுக்சன்-வர்த்தகம் யோகலிங்கம் நிசாதனா-கலை.
திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றுவார்.இறுவெட்டும் வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை நாளை 31ஆம் திகதி புதன்கிழமை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பங்கேற்கும் ஆலயத்தின் ஆடிஅமாசாசை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தந்தையை இழந்தவர்கள் பிதிர்க்கடன் செலுத்தும் நன்னாள் நாளையாகும்.
