சட்டக்கல்லூரி அனுமதிக்கு டி.எம்.கே அஸோஸியேட்ஸ் ஏற்பாட்டில் முற்றிலும் இலவச கருத்தரங்கு!




பி.எம்.எம்.ஏ.காதர்-
"சட்டத்துறைக்கு இளம் தலைமுறையினரை தயார் செய்வோம்" எனும் தொனிப்பொருளில் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டபீடம்மற்றும் இலங்கை சட்டக்கல்லூரி அனுமதிக்கு கூடுதல் மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் குறித்த போட்டிப்பரீட்சை அனுமதிக்குவிண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கு டி.எம்.கே.அஸோஸியேட்ஸ் ஏற்பாட்டில் சாய்ந்தமருதில் எதிர்வரும் 03.03.2019ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு முற்றிலும் இலவச கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
இக்கருத்தரங்கில் தமிழ் மொழிமூலம் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் எப்பாகத்திலிருந்தும்எந்தவொரு மாணவருக்கும் கலந்துகொள்ளும் வாய்ப்பினை வழங்குகிறது. இவ் இலவச கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர்0775746881 எனும் இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தங்களை பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

கல்விப்புலத்தில் சிறந்த ஆளுமைகளை உருவாக்குதல், சட்டத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சமூகமொன்றை கட்டியெழுப்புதல்,சிறந்த இளம் தலைமைகளை தயார் செய்யும் உயரிய நீண்டகால நோக்கில் டி.எம்.கே அஸோஸியேட்ஸ் இம்முயற்சியினைமுன்னெடுத்து வருகிறது.

அத்துடன் மாணவர்கள் ஏன் சட்டத்துறையை தெரிவுசெய்ய வேண்டும், சமூகத்தில் அதன் எதிர்கால தேவை, உயர் தர தொழில்வாய்ப்புகள் குறித்த விரிவான தகவல்களை வழங்கும் வகையில் தேசிய ரீதியில் சட்டத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவளவாளர்களை கொண்டு இக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
போட்டிப் பரீட்சை தொடர்பில் மிகவும் அனுபவம் மிக்க வளவாளர்களை கொண்டு தொடர்சியான பயிற்சிகள் வழங்கப்பட்டு திறந்தபல்கலைக்கழக சட்ட பீடத்திற்கும் இலங்கை சட்டக் கல்லூரிக்கும் கூடுதல் அனுமதிகளை பெற வைக்கும் இம்முயற்சியின் ஆரம்பகருத்தரங்காக இது அமைந்திருக்கும்.
இவ் இலவச கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர் 0775746881 எனும் இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தங்களை பதிவுசெய்யுமாறு வேண்டுவதோடு அனைத்து மாணவர்களையும் எதிர்வரும் 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இவ் இலவசகருத்தரங்கில் கலந்துகொண்டு முழுமையான பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -