2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 05 ஆம் திகதி பெறப்பட்ட நியமனங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு பதவிக்கும் ஒரு செல்லுபடியாகும் நியமனம் மட்டுமே கிடைத்திருந்ததால், எந்தவித போட்டியுமின்றி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்களை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். மாணவர் ஒன்றியங்களின் அமைப்பை ஒழுங்குபடுத்தும் உள்நியமச் சட்ட எண் 01 இன் 09(1) மற்றும் 09(II) பிரிவுகளின் படி, கீழ்க்காணும் மாணவர்கள் 2023/2024 கல்வியாண்டிற்கான கலை மற்றும் கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் பதவியாளர்களாகவும் உறுப்பினர்களாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர் ஒன்றியத்தின் தலைவராக சுபைர் முகம்மது சாஹன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உதவித் தலைவராக முபாரக் முகம்மது சனா, செயலாளராக அலிபுகான் முகம்மது ஹபீஸ், சிரேஷ்ட பொருளாளராக சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர், கனிஷ்ட பொருளாளராக சட்குணம் ஜனுஜன் மற்றும் எடிட்டராக இனாயத்துல்லா முகம்மது இபாம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஒன்றிய உறுப்பினர்களாக சாம்சுதீன் அர்கான், முகம்மது கியாஸ் பாத்திமா சஹ்ரா, மொஹைதீன் சாதிக் முகம்மது இஸ்மத்துல்லா, சாஹுல் ஹமீது ஹஸ்ரத் ரோசானா, முகம்மது சரிப் பாத்திமா ரீமா, முகம்மது இப்ராஹிம் அகமது ஸகீப், முகம்மது லபீர் சப்னாஸ் மற்றும் சாஹுல் ஹமீதூ ஸிப்னால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 2026 ஏப்ரல் 24 ஆம் திகதி கலை மற்றும் கலாசார பீடத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
மேலும், சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஸ்ஹர் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
புதிய மாணவர் ஒன்றியம் எதிர்காலத்தில் பீடத்தின் கல்வி, சமூக மற்றும் மாணவர் நல மேம்பாட்டில் முக்கிய பங்காற்றும் என்ற நம்பிக்கையும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.

0 comments :
Post a Comment