மூத்த எழுத்தாளர் மர்ஹும் மருதூர்க்கனி எழுதிய நூல்களின் அறிமுக விழா

பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மர்ஹும் யூ.எம்.ஹனீபா மருதூர்க்கனி(லங்காதீப)எழுதி வெளியிட்ட ஐந்து நூல்களின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை(2019-02-24) மருதமுனை மருதூர்க்கனி நூலக கேட்போர் கூட்ட மண்டபத்தில் எழுத்தாளர் மர்ஹ_ம் வி.எம்.இஸ்மாயில் மருதூர் கொத்தன் நினைவரங்கில் நடைபெற்றது.
கவிஞர் மருதமுனை ஹஸன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை மருதூர்க்கனி மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.இங்கு மண் பூனைகளும் எலி பிடிக்கும்,அந்த மழை நாட்களுக்காக,மருதூர்க்கனியின் கவிதைகள், என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்,சந்தணம் பெட்டகமும் கிலாபத் கப்லும் ஆகிய ஐந்து நூல்களுமே அறிமுகம் செய்யப்பட்டது.

இங்கு பேராசிரியர்களான சி.மௌனகுரு,றமீஸ் அப்துல்லா, செ.யோகராசா,ஆய்வாளர் சிறாஜ் மசூர்,கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ், விரிவுரையாளர் ஏ.எம்.றியாஸ்.அகமட் ஆகியோர் நூல்கள் பற்றி உரையாற்றினார்கள்;. மருதூர்க்கனியின் புதல்வி டொக்டர் வஜ்னா றபீக்.மருமகன் இஸ்மாயில் பி.மாரிப்ஆகியோர்
ஏற்புரையையும்,நன்றியுரையும் நிகழ்த்தினார்கள். நூலாசிரியரின் மனைவி கமலா ஹனிபா நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நூல்களை இலவசமாக வழங்கினார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -