சமூக நல்லிணக்கத்தை வேண்டி மாபெரும் நடைபவனியும் மகஜர் கையளிப்பும்

எம்.என்.எம்.அப்ராஸ்,ஏ.எல்.எம்.சினாஸ்-
மாதானமும் சமூகப் பணியும் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக நல்லிணக்கம் , சமாதானத்துக்கான வீதி நடைபவனியும். மகஜர் கையளித்தல் நிகழ்வும் இன்று (26 ) அம்பாறையில் நடைபெற்றது.

மணிக் கூட்டு கோபுரம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு அம்பாறை நகர் ஊடாக
மாவட்ட செயலக்த்திக்கு வருகை தந்த பேரணி இறுதியில் அரசாங்கம் அதிபருக்குரிய மகஜரை அம்பாறை மற்றும் தமன பிரதேச செயலாளர் நிலந்த ஸ்ரீவர்தன,மாவட்ட செயலகத்தின் நிர்வாக அதிகாரி உபாலி விஜயசேகர ,பிரதான கணக்காளர் எம்.ஐ. எம்.முஸ்தபா ஆகியோரிடம் சமாதானமும் சமூகப்பணியும் நிறுவனத்தினர்  செயலகத்தில் முன்றலில் வைத்து கையிளித்தனர்.

இதில் அம்பாறை மாவட்ட மூவின மக்களும் கலந்து கொண்டனர் .சமாதானமும் சமூகப்பணியும் நிறுவனம் பல்வேறுபட்ட நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது . இதற்காக பிரதேச , மாவட்ட ரீதியாக நல்லிணக்க குழுக்களை உருவாக்கியதனூடாக மாவட்ட , தேசிய ரீதியில் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அம்பாறை மாவட்டம் பல்லின சமூகங்கள் ஒன்றிணைந்து பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்ற ஒரு மாவட்டமாகும் . இருந்த போதிலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட சவாலான சம்பவங்கள் சமூகங்களுக்கிடையிலான உறவு , நல்லிணக்கம் , அபிவிருத்தியிலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது . இதனை தவிர்த்து நாம் அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து எமது மாவட்டத்தை ஏனைய மாவட்டங்களுக்கு முன்மாதிரியான மாவட்டமாக முன் கொண்டு செல்வதோடு தேசிய நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப கைகோர்ப்போம் . எனும் உன்னோத அடிப்படையில் இப் பேரணி நடைபெற்றது.

சமாதானமும் சமூகப் பணியும் நிறுவனத்தின் பணிப்பாளர் டி .தயாபரன் தலமையில் அம்பரை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் இணைப்பாளர் எஸ்.எல்.அஸீஸ்  நெறிப்படுத்தலில் நடை பெற்றது. மேலும்10 பிரதேச செயலகங்களில் இவ் நல்லிணக்கம் மன்றங்ககள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் சர்வமத தலைவர்கள் ,மாவட்ட உயர்அதிகாரிகள்,நல்லிணக்க மன்றங்களின் இணைப்பாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -