சிறி லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சிகளுக்கு பகிரங்கமாக ஆதரவளித்த மொறவெவ பிரதேச மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படுவதில்லையெனவும் ஜக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரமே வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படுவதாக பிரதேச மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் சேறுவில தொகுதியிலுள்ள மொறவெவ பிரதேசத்திலுள்ள மக்களுக்கு வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்டு வருகின்ற வீட்டுத்திட்ட விண்ணப்பங்கள் ஜக்கிய தேசிய கட்சி தொகுதி அமைப்பாளரின் கையொப்பத்துடனும் பிரதேச சபை உறுப்பினரினால் கொடுக்கப்படுகின்ற பெயர் பட்டியல்களுக்கு மாத்திரமே விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ இனம் மதம் கட்சி வேறுபாடின்றி வீட்டுத்திட்டங்களை வழங்கி வருகின்ற போதிலும் சேறுவில தொகுதி அமைப்பாளர் தனது கட்சியான ஜக்கிய தேசிய கட்சிக்கும் தேர்தல் காலங்களில் தனக்கு ஆதரவளித்த வாக்காளர்களுக்கு மாத்திரமே வீட்டுத்திட்டங்களுக்குறிய மானிய அடிப்பபடையிலான காசோலைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மொறவெவ பிரசே மக்கள் குறிப்பிடுகின்றனர்.
நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு நல்லிணக்கத்தை கொண்டு வருவதற்காக பாடுபட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் சஜித் பிரேமதாஸ இன பாடுபாடின்றி வீடு இல்லாதவர்களுக்கு வீடுகளை வழங்குமாறு கூறி இருக்கும் வேளை ஏன் சேறுவில தொகுதியிலுள்ள மக்களுக்கு மாத்திரம் வீட்டுத்திட்டத்தில் பாகுபாடு காட்டப்படுகின்றது எனவும் மக்கள் கேள்வியாக அரசிடம் கேட்கின்றனர்.
எனவே நல்லாட்சி அரசு ஜக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரம் வீட்டுத்திட்டத்தை வழங்காமல் வீடுகள் இல்லாத அனைத்து இன மக்களுக்கும் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது விடயமாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது அது பயனழிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.