சாய்ந்தமருது பிரதேச பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு

அகமட் எஸ். முகைடீன்-
ரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீஸினால் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்நிதியின் ஊடன அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (01) சனிக்கிழமை காலை கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஃபர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம். சலூபின், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது அமைப்பாளர் எம்.ஐ.எம் பிர்தௌஸ், ஏ. நசார்டீன் மற்றும் எம்.எம்.எம். பாமி, அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஷா, மஸ்ஜிதுல் ஹிதாயா, மஸ்ஜிதுல் பலாஹ், நூரா பிந்தா சாலிஹ், மஸ்ஜிதுல் ஸபா, மஸ்ஜிதுத் தக்வா, மஸ்ஜிதுல் ஆரிபீன், சாலிஹீன் ஜும்மா பள்ளிவாசல், நூர் ஜும்மா பள்ளிவாசல் மாளிகைக்காடு, மஸ்ஜிதுல் கூபா, மஸ்ஜிதுல் றஹ்மான் ஆகிய பள்ளிவாசல்களின் நிர்வாக சபை தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அரசின் கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் தலா 5 இலட்சம் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அந்தவகையில் குறித்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பான இக்கலந்துரையாடலின்போது பள்ளிவாசல்களின் அபிவிருத்தி தேவைகள் தொடர்பான திட்ட அறிக்கைகளை சாய்ந்தமருது பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தரின் உதவியோடு தயாரித்து விரைவுபடுத்தி சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், 5 இலட்சத்திற்கு மேலதிகமான நிதி உதவி தேவையுள்ள அபிவிருத்திப் பணிகளுக்கு மாற்று வழிகள் ஊடாக நிதிகளை பெற்றுத்தருவதாக பிரதி அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் ஒரே சந்தர்ப்பத்தில் இவ்வாறான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு வழியமைத்த பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினை பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர் இதன்போது பாராட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -