152 பொலிஸ் தினத்தினை முன்னிட்டு சுத்தமாகிறது சமாதான நகரம்

க.கிஷாந்தன்-
152 வது பொலிஸ் தினத்தினை முன்னிட்டு சமாதான நகரம் என அழைக்கப்படும் அட்டன் நகரம் சுத்தப்படுத்தும் வேலை திட்டம் ஒன்றினை அட்டன் பொலிஸ் நிலையம் மற்றும் அட்டன் டிக்கோயா நகர சபை ஆகியன ஒன்றிணைந்து 01.09.2018 அன்று காலை 7.30 மணியளவில் முன்னெடுத்தன.

இந்த சிரமதான பணிக்கு அட்டன் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் சமாதான குழுக்கள், முசசக்கர வண்டி சாரதிகள், வேன் சாரதி சங்க உறுப்பினர்கள், விளையாட்டு கழகங்கள் அகியன இணைந்திருந்தன.
அட்டன் மல்லியப்பு சந்தி தொடக்கம் டிக்கோயா வரை சன நடமாடும் பகுதிகள், பொது இடங்களில் மற்றும் வீதியில் இரு மருங்கிலும் கொட்டிக்கிடக்கும் குப்பைகள் பிளாஸ்ரிக் பொருட்கள், கண்ணாடி பொருட்கள் உட்பட அனைத்து கழிவுகளும் இதன் போது அகற்றப்பட்டதுடன் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு கடை உரிமையாளர்கள் மற்றும் வீட்டுரிமையாளர்களும் வலியுறுத்தப்பட்டன.
குறித்த இந்நிகழ்வுக்கு அட்டன் பொலிஸ் கோட்டத்திற்கு பொறுப்பான அத்தியட்சகர் அம்பன்பிட்டி, அட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலசந்திரன், பிரதி தலைவர் ஏ.ஜே.எம்.பாமிஸ் உட்பட அட்டன் கோட்டத்திற்குட்பட்ட எட்டு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -