இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் காத்தான்குடி வைத்தியசாலையின் ஆளணி அதிகரிப்பு


காத்தான்குடி தள வைத்தியசாலையில் நீண்ட காலம் நிலவி வந்த ஆளணி பற்றாக்குறை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அயராத முயற்சியினால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி தள வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து அதனை அதிகரிப்பது சம்பந்தமாக பொது நிர்வாக அமைச்சு, தேசிய சம்பளங்கள் பதவியணிகள் ஆணைக்குழு (national salaries and cadres commission)மற்றும் நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களம் என்பவற்றிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்து விடுத்து வந்த கோரிக்கைக்கு அமைய அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காத்தான்குடி தள வைத்தியசாலையில் பல புதிய வெற்றிடங்கள் உருவாக்கப்பட்டு மேலதிக ஊழியர்கள் நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், வைத்திய ஆலோசகர்கள் 5, வைத்திய நிபுனர்கள் 32, தாதிமார்கள் 50 மற்றும் சிற்றூளியர்கள் 45 என மொத்தம் 196 ஊழியர்களை கொண்டதாக வைத்தியசாலையின் ஆளணி அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,
‘ காத்தான்குடி தள வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூளியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இது விடயம் சம்பந்தமாக நான் தொடர்ச்சியாக விடுத்து வந்த கோரிக்கைக்கு அமைய அதற்கான அனுமதியினை நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வழங்கியிருந்தார்.’ என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -