நான் ஆணை இட்டால்..(கவிதை)


நான் ஆணை இட்டால்..
++++++++++++
Mohamed Nizous

நான் ஆனை என்பார்
இல்லை கை என்பார்
இங்கு ஆளையாள் ஏசி போரிடுவார்.
இவர் உள்ளவரை அவர் பிழை என்பார்
அவர் வந்த பின்னால் அதே பிழை செய்வார்.
அவர் வந்த பின்னால் அதே பிழை செய்வார்.

ஒரு ஊழல் செய்தால் தன் ஆளு செய்தால் 
இவர் தானும் அதிலே பங்கு கேட்பார்.

படம் காட்டி நிற்பார்
கடும் நடிப்பு செய்வார்
பின் ஊழலுக்கெதிராய்ப் போராடுவார்.

சிலர் கூத்துக்கும் சோத்துக்கும் காசிக்கும் வாசிக்கும் ஊர்வலம் கலந்து கொள்வார்
ஒரு கொள்கை இல்லை. 
தரும் முள்ளுக்காக
சிலர் எப்போதும் வால் பிடிப்பார்

ஒரு அதிபர் உண்டு
அவர் தானுண்டு
தன் பாடுண்டு என்று பேப்பர் பார்ப்பார்

அலறி மாளிகையில் அறு சுவையுண்டு
கல்யாணம் காட்சி என சிலர் கிடப்பார்

சிலர் ஏறவும் பூரவும் மாறவும் தேறவும்
ஊரை குழப்பி நிற்பார்
பல தடைகள் போட்டு
பல படைகள் போட்டு
ஆள்பவர் ஆர்ப்பாட்டம் நிறுத்திடுவார்

முன்பு ஏசி நின்றோர்
பின்னர் யோசிக்கிறார்
ஆண்டோர் இப்ப திருந்திட்டாரா?
பாடம் படித்திட்டாரா?
இல்லை நடிக்கிறாரா


காலம்தான் இனி பதில் சொல்லும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -