முன்னாள் கிழக்கு முதல்வர் மீதானது அரசியல் காழ்புணர்வு கோசங்களே!
பாராளுமன்ற பொது கணக்குகள் குழுவான கோப் குழுவின் 2016 ஆம் ஆண்டிற்கான விருது ஏறாவூர் நகர சபைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
அரசியல் அலுவலங்களில் தங்களது வருமானங்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பில் சிறந்த கணக்கீட்டு முறைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கடந்த 2015ம் ஆண்டு மற்றும் தற்போது 2016ம் ஆண்டுக்கான விருதுகள் ஏறாவூர் நகர சபை கிடைக்க பெறுவதன் ஊடாக தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் கோப் விருதை ஏறாவூர் நகர சபை பெற்றுக் கொள்கின்றது. .
குறித்த கோப் குழுவின் விருதுகளை ஏறாவூர் நகர சபை பெற்றுக் கொள்கின்ற 2015, 2016 ஆண்டு காலப்பகுதி ZA.ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதிவி வகித்த காலம் என்பதனால் முன்னாள் முதலமைச்சர் அவர்களினால் ஏறாவூர் நகர சபையின் நிதி துஸ்பிரயோகம் செய்யப்பட்டது என்ற கூற்றுக்கு முற்றுபுள்ளி வைப்பதுடன் முன்னாள் முதலமைச்சர் மீது மேற்கொள்ளப்பட்ட விமர்சனங்கள் அனைத்தும் அரசியல் காழ்புணர்வின் வெளிப்பாடாக சான்று பகிர்கின்றது.
அது மாத்திரமன்றி நல்லாட்சி அரசினால் கோப் குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட அரச நிறுவனங்களில் கோப் விருதயே பெற்றுக் கொள்ளகின்ற அரச அலுவலகமாக ஏறாவூர் நகர சபை தனது நாமத்தை திடமாக இலங்கை வரலாற்றில் பதித்துக் கொள்வதன் ஊடாக நிதி கையாளுகை தொடர்பிலான முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஏறாவூர் நகர சபை மீதான கடந்த கால அனைத்து விமர்சனங்களும் பொய்பிக்கின்றது.
2015,2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது அதிகாரத்தின் கீழ் இருந்த ஏறாவூர் நகர சபைக்கு வருமானம் கிடைப்பதற்கும் முறையான கையால்வதற்கும் தனது ஆளுமையின் ஊடாக ஆலோசனை வழங்கிய முன்னாள் கிழக்கு முதல்வர் ZA.ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களுக்கும் திறம்பட நிருவாகித்த முன்னாள் செயலாளர்
எம்.எச். எம்.ஹமீம் மற்றும் விருதுகள் பெற்றுக் கொள்கின்ற வகையில் சிறப்பான உழைத்த ஏறாவூர் நகர சபையின் ஊழியர் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்.
குறித்த விருது வழங்கும் விழா தற்போது பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது ஏறாவூர் நகர சபை சார்பில் தவிசாளர் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.