திருகோணமலை மாவட்டம் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட சஹஜீவனபுர கிராமத்தின் 119 ஆவது மாதிரி கிராம வீட்டுத் திட்டம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை (09) காலை 09.00 மணிக்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத் துறை அமைச்சர் சஜீத் பிரேமதாசவினால் மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன அவர்களின் ஆசிர்வாதத்துடனும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழும் இத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 25 புதிய வீடுகள் இதன் போது மக்களிடம் கையளிக்கப்பட்டன.
மேலும் கண் பார்வை குறைந்தவர்களுக்கான மூக்குக் கண்ணாடி வழங்கல் நிகழ்வும் இதன் போது வழங்கப்பட்டன.
இவ் நிகழ்வுக்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத் துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச, , திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹரூப், எம்.எஸ்.தௌபீக், துரைரட்ணசிங்கம், இம்ரான் மஹரூப் உள்ளிட்ட உயரதிகாரிகள் என பலரும் பங்கேற்கவுள்ளனர்.