அரபா வெளி
+++++++++++
Mohamed Nizous
மலைக்க வைக்கும்
மலை.
இங்கே
நாற்பது லட்சம் கரங்கள்
நாயனைக் கேட்கும் வரங்கள்.
வெறுமையான வெளிகள்
மறுமையை
மனதில் கொண்டு வரும்.
கூடாரங்களில் கண்கள்
கூட ஆருமில்லா
கப்று வாழ்க்கைக்காய்
கண்ணீர் விடும்.
இறைவா
மறைவாய் செய்தவற்றின்
கறையை நீக்குவாயாக
குறைவாய் செய்த அமலுக்கு
கூலி தருவாயாக.
உள்ளம் உடைய
வெள்ளமாய்ப் பாயும்
உள்ளே இருந்த கண்ணீர்
இறைத்தூதரின்
இறுதி உபதேசம்
இந்தக்
காற்றலையில்
கலந்திருக்கிறது
அபூபக்கர்களின்
அன்பு
உமர்களின்
உறுமல்
அலிகளின்
அறிவுரைகள்
இந்த இடத்தில்
இன்னும் இருப்பதாய்
இதயம் சொல்லும்
பிறர்க்கு அநீதி செய்து
பிரயாச்சித்தம் தேடாதவரைத் தவிர
பாவம் இல்லா மனிதராய்
ஆவார் அனேகம் பேர்
அரபா வெளி
அது பலருக்கு ஒளியாக
சிலருக்கு ஜொலியாக...!