க.பொ.த உயர் தரப் பரீட்ச்சைக்குத் தோற்றிய மாணவர்களை கல்வி, ஆன்மீகம், ஆளுமை மற்றும் திறன் விருத்தி ரீதியாக வழிகாட்டும் நோக்கில் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் வருடாந்தம் இளைஞர் அபிவிருத்தி நிகழ்சி (Youth Development Program) நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நாட்டின் பல பாகங்களிலும் 07 நாள் வதிவிட செயலமர்வாக நடாத்தப்படுகின்றது.
இதன் தொடரில் இவ்வருடம் க.பொ.த உயர் தரப் பரீடசைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான இளைஞர்
அபிவிருத்தி நிகழ்ச்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடாத்தப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் பங்குபற்றும் மாணவர்கள் இஸ்லாமிய அடிப்படைகள் பற்றிய தெளிவு, திறன் விருத்தி, ஆளுமை விருத்தி, கல்வி மற்றும் துறை சார் வழிகாட்டல்கள் போன்றவற்றில் அனுபவமிக்க வளவாளர்களினால் பயிற்றுவிக்கப்படுவதோடு நிகழ்சி முடிவில் முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்த சான்றிதழும் வழங்கப்படும். இவ் இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விரும்புவோர் மற்றும் மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
தமிழ் மொழி மூலம்: அப்துல் அஸாம் - 0776675254
ஆங்கில மொழி மூலம்: அக்ரம் நஸீர் - 0777849974
சிங்கள மொழி மூலம்: ரஸ்மி - 0772181223
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -