என்ன இடர்பாடுகள் வந்தாலும் எமது அரசியல் பயணம் தொடரும்.
இன்ஷா அல்லாஹ் இதனை யாரும் தடுத்து விட முடியாது.
இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கெளவர காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.
இன்று முசலி வாழ் பொதுமக்கள் பிரதி அமைச்சராக நியமனம் பெற்ற கெளவர காதர் மஸ்தான் அவர்களை வரவேற்று முசலி பாடசாலைக்கு முன்னால் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே இத்தகவல்களை தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்ட தாவது
மன்னாரை சொர்க்க புரி என வெளிமாகாணங்களில் சிலர் கூறித்திரிகிறார்கள்.
ஆனால் அது உண்மையல்ல
இலங்கையில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக மன்னார் மாவட்டம் விளங்குகிறது.
இம்மாவட்டத்தின் நிலைமைகளை அறிந்த ஜனாதிபதி அவர்கள் மிகவும் வேதனையுடன் இந்த வடமாகாண அபிவிருத்தி அமைச்சை என்னிடம நம்பி ஒப்படைத்திருக்கிறார்.
ஆனால் நாங்கள் பணியாற்ற ஆரம்பிக்க முன்னமே எங்களை தடுத்து நிறுத்த ஒரு கூட்டம் முனைந்திருக்கிறதென்றால்,
அவர்களை அளப்பதற்கு வேறு அளவுகோல்கள் தேவையில்லை.
முசலி தேசிய பாடசாலை அதிபருக்கூடாக வலயக் கல்விப் பணிமனைக்கு உரிய முறையில் விண்ணப்பித்து பாடசாலை மைதானத்தில் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதியை நாங்கள் பெற்ற பின்பும் கூட்டத்தை நடத்த முடியாத அளவுக்கு விசமம் பிடித்தவர்களின் அராஜகம் இந்த முசலி மண்ணில் தலை விரித்தாடியிருக்கிறது.
எங்களையும் பொறுமையின் கடைசி எல்லை வரைக்கும் நடக்க வைத்திருக்கிறது.
கொழும்பிலிருந்து ஒரு செய்தி வந்திருந்தால் இந்த புற்று மண்குதிரைகள் எங்கேயோ ஓடி ஒழிந்திருப்பார்கள்.
இந்த அயோக்கியத்தனங்களையெல்லாம் தெளிவாக அறிந்த பின்னர்தான் நாம் அரசியலுக்கும் பிரவேசம் செய்திருக்கிறோம்.
இந்த முசலிப்பகுதி அடைய வேண்டிய அபிவிருத்தி தொடர்பில் புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று திட்டவரைபுகளை உருவாக்கி எமது நடவடிக்கைகளை தொடரும் அதே வேளை இவ்வளவு இடையூறுகளுக்கும் மத்தியில் இந்த கொளுத்தும் வெயிலிலும் எமது பேச்சுக்களை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன் எனவும் குறிப்பிட்டார்.
முசலியில் இடம்பெற்ற கூட்டத்தை தொடர்ந்து கரடிக்குழி,பாலைக்குழி,மறிச்சிக்கட்டி, பொற்கேணி.சிலாவத்துறை ஆகிய இடங்களிலும் வரவேற்பு கூட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.