இந்நிகழ்வில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.முபாறக் பிரதம அதிதியாகவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர்களான கங்கா சாகரிக தமயந்தி , எஸ்.எம்.எம்.லத்தீப் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்வினை சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோஸ்தர் எம்.ரீ.எம்.ஹாறூன் , அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரியுமான இஸட்.எம்.ஸாஜித் , கல்முனைத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எப்.எம்.தில்சாத் , சாய்ந்தமருது இளைஞர் சம்மேளனத் தலைவர் எம்.வை.எம்.றகீப் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ் இளைஞர் கழக விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுனர் போட்டிகளிலும் ,சகலதுறை சம்பியன்களாகவும் மருதூர் மெய்வல்லுனர் நட்சத்திர அணி தெரிவு செய்யப்பட்டது.