எம்.என்.எம்.அப்ராஸ்-
சாய்ந்தமருது ரெட் மெக்ஸ்( RED MAXX) அமைப்பின் ஆரம்ப நிகழ்வும் ,நமக்கான பாதையை நாமே உருவாக்கிக்கொள்வோம் ” எனும் தொனிப்பொருளில் சமூக நலன் விடயங்களை உள்ளடக்கிய திட்டமொன்றை ஆரம்பித்தது அதன் அங்கமாக சமூக நலன்புரிச் சேவை, கல்விச் சேவை , விளைையாட்டு , என்ற பிரதான அம்சங்களை உள்ளடக்கியமைந்து.
அவ் அமைப்பின் நோக்கங்களை தெளிவூட்டும் நிகழ்வு (7) சாய்ந்தமருது சீ பிரீஸ் ரெஸ்டுரண்டில் இடம்பெற்றது.
ரெட் மெக்ஸ் அமைப்பின் தலைவர் ஏ.எம்.ஏ.நிஸார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது . இவ் அமைப்பின் ஸ்தாபகர் ஏ.என்.எம்.ஜலூத் அவர்களினால் நெறிப்படுத்தப்பட்டது. இவ் நிகழ்வில் பிரதானமாக 3 விடயங்களை மையப்படுத்தி சமூக நலன்புரி, கல்வி ,விளையாட்டு
கொடிகள்,மற்றும் சீருடை அறிமுகம் என்பன இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். சலீம் அவர்கள் கலந்து கொண்டதுடன் , கௌரவ அதிதிகளாக
வசந்தம் தொலைக்காட்சியின் சிரேஸ்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர் எம்.எஸ்.எம்.முஸர்ரப் , மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் எம்.என்.எம்.டில்சாத் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர் .
மற்றும் விஷேட அதிதிகளாக பொறியியலாளர் எம்.ஐ.றியாஸ் , வியூகம் முகநூல் தொலைக்காட்சியின் பணிப்பாளர் எஸ்.ஜனூஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும்,மற்றும் சமூக ஆர்வலர்கள் ,பாடசாலை அதிபர்கள் கல்வியலாளர்கள் இளைஞர்கள எனப்பலரும் ,கலந்து கொண்டனர். மேலும் இவ் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு அவ் அமைப்பினரால் நினைவுச்சின்னம்,பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.