இவ்வாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளரும், சமூக ஆர்வாளருமான றுஸ்வின் முஹம்மட் தனது ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
இந்த புனிதமான நாளில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏகாதிபத்திய நாடுகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆக்கிரமிப்புக்கள் மற்றும் யுத்த நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் இவ்வாறான செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபவர்கள்,பெண்கள் மற்றும் வயோதிபர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக.
இஸ்லாத்துக்கு எதிராக இலங்கையில் திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து முஸ்லிம்கள் மிகவும் கவனமாகவும் - அவதானமாகவும் இருக்க வேண்டும். அத்துடன், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவும் - புரிந்துணர்வோடும் வாழ இத்திருநாளில் பிரார்த்தனை செய்வோம்.
அரசியல் ரீதியாக சிறுபான்மையின மக்கள் ஒரு முக்கியமான கால கட்டத்தில் இருக்கின்ற இச்சூழ் நிலையில் அதிகார பரவலாக்கம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் குறிப்பாக வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் எந்தவிதமான வெளிநாட்டு சக்திகளுக்கோ, இனவாத சக்திகளுக்கோ அடிபனியாமல் அதன் வலைகளில் சிக்காமல் மிக அவதானமாக இருக்க வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன், கடந்த ஒரு மாத காலமாக அல்லாஹ்வினதும், அவனது தூதுர் முஹம்மது நபி(ஸல்) அவர்களதும் வழிமுறைகளை எவ்வாறு பின்பற்றினோமோ அவ்வாறே தொடர்ந்தும் பொறுமையாக ஒற்றுமையாக செயல்படுவோம் - என்றார்.