முழு அம்பாறை மாவட்ட மக்களின் அபிலாஷையினையும் உள்ளடக்கியதாக புதிய உலகின் புதிய நுழைவாயிலை நோக்கிய எனது அபிவிருத்தி பணியினை நகர்த்த முடியும் என்ற நம்பிக்கையோடு ஒரு அதிகாரம் மிக்க எனது அரசியல் பயணத்தினை ஆரம்பித்துள்ளேன். இதற்குரிய பூரண ஓத்துழைப்பினை அனைவரிடமும் இருந்து எதிர்பார்க்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி இஸ்மாயில் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவித்த்துள்ளாதாவது
புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதி;ல் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஈத் முபாறக்.
ஒரு மாதம் அழ்ழாஹ்வுக்காக நோன்பிருந்து பொறுமை, சகிப்புத்தன்மை, தர்மம் போன்ற நாம் பெற்ற பயிற்சிகளை நமது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தொழுகி உயர் சுவனம் அடைய நம்மெல்லோருக்கும் எல்லாம் வல்ல அழ்ழாஹ் அருள்புரிவானாக.
கடந்த 2015 பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் நமது தலைவர் அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது கன்னித் தேர்தலை சொந்தச் சின்னமான மயிலில் சந்தித்திருந்தது. சுமார் 33000 இற்கும் அதிகமான வாக்குகள் அம்பாறை மாவட்ட மக்களினால் நமது கட்சிக்கு வழங்கப்பட்டிருந்தும் பாராளுமன்ற உறுப்புரிமையை சொற்ப வாக்குகளால் பெற முடியாமல் போயிருந்தது.
இருந்தாலும் இம்மாவட்டத்தில் 2000 இளைஞர்களின் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்காக தொழில் பேட்டை அமைப்பதற்கான முயற்சிகளை செய்தோம். அரசியல் அதிகாரமின்மையால் இவைகளை நிறைவேற்ற பலரிடம் மன்றாடினோம். ஆனாலும் சிலரின் குறுகிய அரசியல் நோக்கு அம்பாரை மாவட்டத்தின் அரசியல் பெட்டகத்தை தடை செய்தது.
இந்நிகழ்வுகள் நம் அனைவரையும் வேதனைப்படுத்தியது. அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலம் பற்றி எங்கள் கட்சியின் தலைவர் அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களிடம் முறையிட்டோம். எங்களது மக்களுக்கு சேவை செய்வதற்காக பாராளுமன்ற உறுப்புரிமையை வேண்டி நின்றோம். அல்ஹம்துலில்லாஹ். நமது மக்கள் மீது அவர் கொண்ட அளவிலா அன்பு காரணமாக இன்று அம்பாறை மாவட்டத்துக்கு நமது கட்சியின் தேசியப் பட்டியல் நியமனத்தை வழங்கி அழகு பார்த்திருக்கிறார்.
இவ்வேளை நமது மக்கள் சார்பாக நன்றிகளை தலைமைக்கும் செயலாளர் நாயகம், தவிசாளர் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதோடு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைவரும் பிரதமருமான கௌரவ ரணில் விக்ரமசிங்ஹ அவர்களுக்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இது முழு அம்பாறை மாவட்ட மக்களுக்குமான வரப்பிரசாதம் என்பதோடு பல்வேறு அபிவிருத்திகளை வேண்டி நிற்கின்ற எமது மாவட்டத்தின் நிலைபேறான அபிவிருத்திக்காகவும், மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்காகவும், சமூக நல்லிணக்கத்தின் ஊடாக எமது மாவட்டத்தின் ஒற்றுமைமிகு சமூக கட்டமைப்புக்காகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக நான் தெரிவு செய்யப்பட்டமை எனக்கு மட்டுமன்றி ஒட்டு மொத்த அம்பாறை மாவட்டத்துக்கும் கிடைத்த பாரிய வெற்றி என்பதில் துளியளவும் ஐயமில்லை.
அதேவேளை புதிய அரசியல் அதிகாரம் புனிதமான நோன்பு மாதத்தில் கிடைத்துள்ளது. அது இறைவனால் நமது மண்ணுக்கு அளித்த வரம் என்றே கருதுகிறேன். நோன்பு ஒவ்வொரு மனிதனுடைய தனிப்பட்ட வாழ்வியலை இறைவனுக்கு பொருத்தமான விதத்தில் அமைத்துக்கொண்டு, மனித உறவுகளோடு கொண்டுள்ள தொடர்புகள், ஒழுக்கவியல் நடைமுறைகள், அடுத்தவர் மனங்களை புரிதல், மனித மனங்களை புண்படாமல் நடந்துகொள்ளும் முறைமை, பொறுமை, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, போன்ற பல்வேறு வாழ்க்கை தத்துவங்களை மனிதனுக்கு போதிக்கிறது. அவற்றை ஒவ்வொரு தனிமனிதனும் கடைப்பிடிக்கும் போது சிறந்த நல்லொழுக்கமுள்ள சமூகமொன்றை கட்டியெழுப்ப முடியும்.

இஸ்லாமிய எழுச்சியானது மனித பண்பாடுகளின் வெளிப்பாடுகளினாலே வளர்ந்துள்ளது. இஸ்லாம் ஒவ்வொரு தனி மனிதனும் மற்றைய ஒவ்வொரு தனிமனிதனோடும் நடைமுறை வாழ்வியலில் நடந்துகொள்ளும் விதம் குறித்து மிகவும் விரிவாக பேசுகிறது, அந்தவகையில் நோன்பானது இதற்குரிய அடிப்படை பயிற்சிக்களமாகவே அமைந்துள்ளது.
நோன்பு மாதம் தந்த அந்த பயிற்சியினை ஏனைய நாட்களிலும் நடைமுறை வாழ்வில் கடைப்பிடித்தொழுகும்போது முழுமை பெற்ற மனித சமூகமொன்றினை கட்டியெழுப்பலாம்.
இன்று சமூகத்தின் பண்பாட்டு நடைமுறைகள் சீர்குலைந்து காணப்படுகிறது. ஒருவர் மீது மற்றொருவர் அபாண்டங்களையும் அவதூறுகளையும் பரப்பி சமூகத்தின் நேர்மையான சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனி மனிதனும் அடுத்தவரின் குறைகளை கண்டுபிடித்து அதில் இன்பம் காண விழைகிறான் அத்தகைய போக்கு அவனது சொந்த வாழ்வியல் முன்னேற்றத்தையே இல்லாமலாக்கும்.
அரிய வாய்ப்பாக கிடைத்த இந்த புனித ரமலான் மாதம் கொண்டுவந்த சீர்திருத்தங்களை ஒவ்வொரு தனி மனித வாழ்விலும் இஸ்லாம் நமக்கெல்லாம் கற்றுத்தந்த வழிமுறைகளின் படி செயல்படுத்தும் போது ஒரு நிலைபேறான பூரணப்படுவம் மிக்கதொரு சமூகம் உருவாக வாய்ப்பு ஏற்படுவதோடு மறுமை ஈடேற்றத்துக்கும் வழிவகுக்கும்.
மேலும் நமது மாவட்டத்தினை புதிய உலகின் புதிய நுழைவாயிலை நோக்கி நகர்த்த முடியும் என்ற நம்பிக்கையோடு அம்பாறை மாவட்ட அனைத்து மக்களுக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுகிற இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவிப்பதோடு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.