அனைத்து பேதங்களையும் மறந்து ஒற்றுமைப்படுவோம்; மு.கா. செயலாளர் நிஸாம் காரியப்பர்




அஸ்லம் எஸ்.மௌலானா-
நாட்டின் இன்றைய அரசியல் சூழலில் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, அபிலாஷைகள் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து பேதங்களையும் மறந்து முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் வெளியிட்டுள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று அரசியல் ரீதியாக பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் மார்க்க ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாரிய நெருக்கடிகளை சந்தித்தோம். எமது வணக்கஸ்தலங்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
சர்வதேச ரீதியிலும் முஸ்லிம்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதமில்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. மியன்மார் போன்ற நாடுகளில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.
எவ்வாறாயினும் முஸ்லிம்களையும் புனித இஸ்லாம் மார்க்கத்தையும் இறைவன் நிச்சயம் பாதுகாத்து, ஸ்திரப்படுத்துவான் என்று நாம் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம். எனினும் அதற்கான முயற்சிகளை பக்குவமாக முன்னெடுக்க வேண்டும். ஏனைய சமூகத்தினர் எம்மை விரல் நீட்டி குற்றம் சுமத்துகின்ற அளவுக்கு எமது செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது. புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று நமது ஈமான் பலப்பட்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இறை நம்பிக்கையுடன் வெற்றியின்பால் செல்வதற்கு திடசங்கற்பம் பூணுவோம். ஈத்முபாரக்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -