முஸ்லிம்களுக்கு விரோதமான ஆட்சி தலைதூக்காத்திருக்க பிரார்த்திப்போம்; இணைப்பாளர் அஸ்வான் மௌலானா


மது நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான கொடூர ஆட்சி மீண்டும் தலைதூக்காத்திருக்க இப்புனிதத் திருநாளில் அனைத்து முஸ்லிம்களும் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் என முஸ்லிம் சமய விவகார அமைச்சின் இணைப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசாரச் செயலாளருமான அஸ்வான் ஷக்காப் மௌலானா தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
"இலங்கை வாழ் முஸ்லிம்கள் கடந்த கால கொடூர ஆட்சியாளர்களினால் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு வந்ததை எளிதில் மறந்து விட முடியாது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாசார, சமூக, பொருளாதார பலத்தை அழித்தொழிக்கும் திட்டத்துடன் பேரின கடும்போக்குவாத அமைப்புகள் அன்றைய ஆட்சியாளர்களின் ஒத்துழைப்புடன் பல நாசகார செயற்பாடுகளை கட்டவிழ்த்து விட்டிருந்தன.
முஸ்லிம்களின் ஹலால் உணவு விடயத்தை பெரும் சர்ச்சையாக மாற்றி, பல பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டதுடன் இன்னும் சில பள்ளிவாசல்கள் பலாத்காரமாக மூடப்பட்டதும் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதும் நோன்பு காலத்தில் கிரீஸ் பூதங்கள் வெளிப்பட்டதும் கடந்த ஆட்சியாளர்களின் கறைபடிந்த அத்தியாயமாகும்.
ஆட்சி மாற்றத்தின் மூலமே முஸ்லிமகளுக்கு நிம்மதி ஏற்படும் என்ற இறைவனின் நாட்டப்படி முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்லாட்சியை கொண்டு வந்தோம். ஆனால் முஸ்லிம்களை கொடுமைப்படுத்திய அதே இனவாத மாபியாக்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இன்று முஸ்லிம்களை நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து தூரமாக்கும் கபட நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். கண்டி, திக்கான சம்பவமுமம் இதன் பின்னணியிலேயே அரங்கேற்றப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் அந்த மாயைக்குள் வீழ்ந்து ஏமாந்து விடக்கூடாது.\

ஓர் அமைதிப் புரட்சியினால் உருவான இந்த நல்லாட்சி நீடிப்பதன் மூலமே நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடியும் என்பதை உணர்ந்து, செயட்பட திடசங்கற்பம் பூணுவோம்.

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். ஈத்முபாறக்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -