"முத்தொளி" கவிதை தொகுப்பு நூல் வெளியீடும் கெளரவிப்பும்..

காத்தவூர்க்கவி் பஹ்த் ஜுனைட் எழுதிய "முத்தொளி" என்ற கவிதைத் தொகுப்பு நூல்25.02.2018 ஞாயிறன்று ஓட்டமாவடியில் நடை பெற்ற நுட்பம் முதலாண்டு விருது வழங்கும் விழாவில்
வெளியிடப்பட்டது.

அவ்வமயம் பிரான்ஸ் தமிழ்நெஞ்சம் சஞ்சிகை ஆசிரியர் கவிஞர் அமின் அவர்களும், இந்திய தமிழ் நாட்டு கவிஞர்கள், மற்றும் இலங்கையைச்
சேர்ந்த நுட்பம் குழும கவிஞர்களின்
முன்னிலையில் அனைவராலும் நூலாசிரியர் காத்தவூர்க்கவி
பஹ்த் ஜுனைட் அவர்கள் கெளரவிக்கப்பட்டு "முத்தொளி" கவிதை தொகுப்பு நூலும் வெளியிடப் பட்டது..!!

தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் அனைவராலும் ஏகோபித்து பாராட்டப்
பட்ட "முத்தொளி" கவிதை நூல் காத்தான்குடி மண் கவித்துறைக்கு தந்த மற்றொரு கவிஞரின் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய்
விளங்கும் என்பது திண்ணம்.

இவண்.

ஆடூர்.சுகுமாறன்.
துணைத்தலைவர்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்
தமிழ்நாடு.

(தமிழ்மாறன். இந்தியா)








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -