அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் புதிய ஆசிரிய பயிலுநர்கள் இணைப்பு



எம்.ஜே.எம். சஜீத்-
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த. (உயர்தர) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட புதிய ஆசிரிய பயிலுநர்களை அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (25) கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் பீடாதிபதி எம்.சி. ஜுனைட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இரண்டாம் ஆண்டு ஆசிரிய பயிலுநர்கள் புதிய பயிலுநர்களை அன்புடன் வரவேற்று, கல்லூரி சமூகத்தின் புதிய உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். புதிய பயிலுநர்களுக்கு கல்லூரியின் கல்விச் சூழல், ஒழுங்குவிதிகள், கல்வி நடவடிக்கைகள் மற்றும் வளாக வாழ்க்கை தொடர்பான ஆரம்ப வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான ஆசிரிய பயிலுநர் ஆட்சேர்ப்புத் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் ஆரம்பக் கல்வி, விஞ்ஞானம், கணிதம், இஸ்லாம், விசேட கல்வி, முயற்சியான்மை கல்வி மற்றும் நிதி அறிவியல், சிங்கள மொழி மூலமான இஸ்லாம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு பாடநெறிகளுக்காக மொத்தம் 420 ஆசிரிய பயிலுநர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

அதன் முதற்கட்டமாக இன்று 256 ஆசிரிய பயிலுநர்கள் பதிவு செய்யப்பட்டனர். அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், விடுதித் தங்குமிட வசதிகள் மற்றும் ஏனைய அடிப்படை ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிகழ்வில் நிதி மற்றும் நிர்வாகத்திற்கான உப பீடாதிபதி எம்.டி. முஸம்மில், கல்விக்கான உப பீடாதிபதி ஏ.ஜி. அஹமட் நழீர், தொடருறு கல்விக்கான உப பீடாதிபதி ஏ.எஸ்.எம். சதாத், நிர்வாகத்திற்கான இணைப்பாளர் ஏ.எம். நியாஸ், கல்விக்கான இணைப்பாளர் எம்.சீ.எம். ஜெஸீம், கல்லூரியின் பதிவாளர் எச்.எம்.ஏ. ஹசன், அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபர் எம்.எச்.ஏ. சதாத், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரிய பயிலுநர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

புதிய ஆசிரிய பயிலுநர்களின் இணைப்பு நிகழ்வானது, எதிர்காலத்தில் திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை உருவாக்கும் தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பணிக்குப் புதிய வலுசேர்க்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :