கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் கிரிக்கெட் பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டு அதற்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (26) திங்கட்கிழமை கல்லூரி அதிபர் வி. பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த பாடசாலைக்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்தார்.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் கிரிக்கெட் பாடசாலையாக விளையாட்டுத்துறை அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட குறித்த பாடசாலை மாணவர்கள் கடின பந்து கிறிக்கெட் பயிற்சியினை மேற்கொள்வதற்கு ஏதுவாக 6 இலட்சம் ரூபா செலவில் ஆடுகள பயிற்சித் தளம் அமைக்கப்பட்டு சிரேஸ்ட மற்றும் கனிஷ்ட பிரிவு விளையாட்டு கழகங்களுக்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.