இலவச உயர் கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு



மது நாட்டில் பல மாணவர்கள் சரியான உயர் கல்விக்கான வழிகாட்டல்களை பெற முடியாமல் பொருத்தமற்ற பாட நெறிகளை தெரிவு செய்து தங்களுடைய இலக்குகளை அடைய முடியாமல் மிகவும் கஷ்டப்படுகின்ற இந்நிலைமையை கருதிக்கொண்டு கொழும்பு அமேசென் உயர் கல்வி நிறுவனத்தினால் ''சிகரம் தொடுவோம்" எனும் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை எதிர் வரும் (17/02/2018) சனிக்கிழமை காலை 09.00 முதல் பகல் 12.00 மணி வரை தெஹிவளை எஸ் .டி .எஸ் ஜெயசிங்க மண்டபத்தில் நடாத்துவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இலங்கையின் பிரபல கல்வியியலாளர், உளவியலாளர் இல்ஹாம் மரிக்கார் மாணவர்களுக்கு பயனுள்ள பல விடயங்களை வழங்க உள்ளார் . மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னால் விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம் அவர்களும் விசேட உரையாற்ற உள்ளார்.

அது மட்டுமன்றி எதிர்காலத்தில் எந்த துறைகளில் தேவைப்பாடு காணப்படுகிறது. பல்கலைக்கழகம் கிடைக்காத மாணவர்களுக்கு எவ்வாறு தமது பட்டப்படிப்பினை மேற்கொள்வது? மேலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் காணப்டுகின்ற புலமைப்பரிசில்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற இன்னும் பல முக்கியமான விடயங்களை கலந்து ஆலோசிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு: 0765204604

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -