பெரிய ராணிவத்தைக்கு செல்லும் தோட்ட பாதையினை புனரமைத்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை


க.கிஷாந்தன்-

லிந்துலை பெரிய ராணிவத்தை தோட்ட பாதை கடந்த சில வருடகாலமாக குன்றும் குழியுமாக காணப்படுவதனால் அம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்

நாகசேனை நகரிலிருந்து சுமார் ஏழு கிலோ மீற்றர் வரை நீளமான இப்பாதை பெரிய ராணிவத்தை, சிறிய ராணிவத்தை, பேரம், மிடில்டன், பம்பரகெலே ஆகிய தோட்டங்களை சேர்ந்த சுமார் 5000 திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற இப்பாதை குன்றும் குழியுமாக செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

அத்தோடு பாதை சீரின்மையினால் கூலி வாகனங்கள் அதிக பணம் அறிவிடுவதாகவும் அடிக்கடி வாகனங்கள் பழுதடைவதனால் பொது போக்குவரத்து அடிக்கடி இடைநிறுத்தப்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

பல அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் வருகை தந்து வாக்குறுதிகளை தந்த போதிலும் அவை இது வரை நிறைவேற்றப்படவில்லை என இந்த மககள் அங்கலாக்கின்றனர்.

மழைக்காலங்களில் குறித்த பாதையில் மக்கள் நடந்து கூட போக முடியாத நிலை காணப்படுவதாகவும் இந்த பாதை சீர் கேடு காரணமாக இத்தோட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது குறித்து உரியவர்கள் கவனமெடுத்து மிக விரைவில் இப்பாதையினை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்;.

இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்…

இந்த பாதையில் ஒரு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் ஏழு தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆனால் அந்த பஸ் அடிக்கடி பழுதடைந்து இடைநிறுத்தப்படுகின்றன. அவ்வாறே சேவையில் ஈடுபட்டாலும் சுமார் இரண்டு கிலோமீற்றருக்கு தொலைவிலேயே நிறுத்தப்படுகின்றனர். தலவாக்கலையிலிருந்து 40 ரூபா கொடுத்து வந்து விட்டு இந்த இரண்டு கிலோ மீற்றர் செல்வதற்கு 250 ரூபா முச்சக்கரவண்டிக்கு செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு நாங்கள் எங்கு செல்வது என அவர் மேலும் தெரிவத்தார்.

இது குறித்து மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த பாதையில் 55 வருட காலமாக ஒரே ஒரு இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்தான் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் அடிக்கடி உடைந்து இடைநிறுத்தப்படுகின்றனது. இதனால் பல தோட்டங்களை சேர்ந்த சிறுவர்களும் வேலைக்கு செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றர்.

மக்கள் பிரதி நிதிகள் ஓட்டு கேட்க மாத்திரம் இந்த தோட்டத்திற்கு வருகிறார்களே தவிர வேறு எதற்கும் வருவதில்ல. நாங்கள் ஓட்டு தருகிறோம். எங்களுக்கு ரோட்டை தாருங்கள் என தெரிவித்தார்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -