ஆனால் இந்த குற்றசாட்டை ட்ரம்ப் மறுத்தார். கடந்த ஆண்டு இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வந்தபோது, அதை மறுத்த ட்ரம்ப், அவர்களிடம் வழக்கு தொடுக்குமாறு சவால் விடுத்தார். ஆனால், இதுதொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இதனிடையே வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 'கடந்த ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது சுமத்தப்பட்ட இது போன்ற தவறான குற்றச்சாட்டுகளுக்கு அப்போதே விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்க மக்கள் தீர்க்கமான வெற்றியை வழங்கியதன் மூலம், அவர்களின் தீர்ப்பை வெளிப்படுத்திவிட்டனர். ரஷ்யாவுடன் இணைந்து சதி நடக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
ட்ரம்ப் மீது பாலியல் புகார் கூறிய ஜில் ஹார்த் என்ற பெண்மணியை தான் பார்த்ததே இல்லை என ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால் ஹார்த்துடன் ட்ரம்ப் நிற்கும் இளமை கால புகைப்படம் அமெரிக்க இணையங்களில் வைரலாக சுற்றி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த 54 பெண் எம்.பி.க்கள் பாராளுமன்ற குழு தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.
டிரம்ப் குறித்து அமெரிக்க மக்கள் உண்மையை அறிய விசாரணை தேவை என ஜனநாயக கட்சியின் பெண்கள் பணிக்குழு தலைவர் லாயிஸ் பிராங்கல் தெரிவித்துள்ளார்.